பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மூன்றினையும் தொகுத்து நோக்குவோமாக. அம் மூன்றனுள் ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்தாக அமைந்தது,

"நீலமேனி வாலிழை பாகத்

தொருவன் இருதாள் நிழற்கீழ் மூவகையுலகும் முகிழ்த்தன முறையே’

எனவரும் பாடலாகும். "நீலநிறம் வாய்ந்த திருமேனி யினையும் தூய அணிகலங்களையும் உடைய உமா தேவியாரை ஒருபாகத்திற் கொண்ட ஒப்பற்ற முதல்வனாகிய சிவபெருமானுடைய திருவடி நீழலின்கண்ணே மேல், கீழ், நடுவென்னும் மூவகையுலகங்களும் முறையே தோன்றின.” என்பது இதன்பொருளாகும்.

“கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்

தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் மார்பினஃதே மையினுண்ஞாண். நுதல திமையா நாட்டம் இகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலு முண்டத் தோலா தோற்கே ஊர்ந்ததேறே சேர்ந்தோள் உமையே செவ்வா னன்னமேனி யவ்வான் இலங்கு பிறையன்ன விலங்குவால் வையெயிற் றேரிய்கைந் தன்ன வவிர்ந்து விளங்கு புரிசடை முதிராத் திங்களொடு சுடருஞ்சென்னி மூவா வமரரும் முனிவரும் பிறரும் யாவருமறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமா னுரிவை தைஇய யாழ்கெழு மணிமிடற்றந்தணன் தாவில் தானிழல் தவிர்ந்தன்றால் உலகே’

என்பது அகநானூற்றுக் கடவுள் வாழ்த்தாகும்.

கார் காலத்து மலரும் கொன்றையின் பொன்போலும் பூக்களால் இயன்ற (தோளில் அணிந்த) தாரினையும் (மார்பில் அணிந்த) மாலையினையும் (முடியிற்சூடிய) கண்ணியினையும் உடையான் குற்றம் இல்லாத நுண்ணிய புரிநூல் அவன் மார்பின் கண்ணது. இமையாத கண்