பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

347


(மூன்றனுள் ஒன்று) அவன் நெற்றியின் கண்ணது; குந்தாலியொடு மழுப்படை பகையினையழித்து அவன் கையின் கண் உள்ளது, யாவர்க்குந் தோலாதானாகிய அவனுக்கு முத்தலைச் சூலப்படையும் உண்டு. அவன் ஊர்தியாகக் கொண்டு செலுத்துவது ஆணேறு ஆகும். அவனைச் சேர்ந்து பிரிவின்றி விளங்கும் தேவியாவாள் உமையம்மையே, மாலைக் காலத்துச் செவ்வானத்தை யொத்து விளங்கும் அவனது திருமேனியின்கண் அத்தகைய வானிடத்தே விளங்கும் வெள்ளிய பிறையினைப் போன்று குறுக்கிட்டு விளங்கும் கூரிய பன்றிக் கொம்பினையும் தீயானது சுடர்விட்டு எரிந்தாலொத்து விளங்கும் செஞ்சடையினையும் (அத்தகைய சடைமீது அணியப்பெற்ற) மூவாத இளம்பிறையுடன் திகழும் சென்னியினையும், என்றும் முதுமையடையாத தேவர்களும் முனிவர்களும் பிறரும் ஆகிய யாவராலும் அறிய வொண்ணாத தொன்மை வாய்ந்த இறைமைத் தன்மையினையும் உடையனாய் வரிகளோடு தோன்றும் வலிய புலியின் தோலையுடுத்த, யாழிசை போலும் இனிய குரலும் நீலமணி போலும் நிறமும் ஒளியும் வாய்ந்த எவ்வுயிர்க்கும் அழகிய தண்ண்ளியைப் புரிவோனாகிய சிவபெருமானது வருத்தமில்லாத வலிய திருவடி நிழலின் கண்ணே இவ்வுலகம் தங்கியுள்ளது” என்பது இப்பாடலின் பொருளாகும்.

"இசைதிரிந்திசைப்பினும் இயையுமன் பொருளே

அசை திரிந் திசையா என்மனார் புலவர்”

(தொல். பொருளியல் 1)

எனவரும் தொல்காப்பியச் சூத்திரவுரையில், “சொல்லொடு சொல் தொடர்வுபடும் வாய்பாட்டால் தொடராது பிறிதோர் வாய்பாட்டால் தொடுப்பினும் பொருட்டொடர்பு உண்டாயின் பொருள் இயையும். அவ்வழி அசைச்சொற்கள் திரியாது நின்ற நிலையே பொருள்படும்” என்பதற்கு இப்பாடலை உதாரணமாகக் காட்டுவர் இளம்பூரணர்.

இதற்குக் "கொன்றையாலமைந்த தாரினனாய் மாலையனாய்க் கண்ணியனாய் நுண்ஞாண் மார்பினனாய் இமையா நாட்டத்து நுதலினனாய்க் கணிச்சியும் மழுவும்