பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மூவாய்வேலும் ஏந்திய கையினனாய் யாவர்க்குந் தோலா தோனுமாய் ஏற்றினையும் ஊர்ந்து உமையாளையுஞ்சேர்ந்து செவ்வான் அன்ன மேனியையும் பிறைபோன்ற எயிற்றினையும் எரி போன்ற சடையினையும் திங்களொடு சுடருஞ்சென்னியையும் உடையனாய் மூவா அமரர் முதலிய யாவரும் அறியாத்தொன்முறை மரபினனாய்ப் புலியதளையும் உடுத்த யாழ்கெழு மணிமிடற்று அந்தணனது சிவானுபூதியிற் பேருலகம் தங்கிற்று” எனப் பொருள் உரைத்தார் இளம்பூரணர்.

யாழ்கெழு மணிமிடற்று அந்தன னாகிய சிவபெருமானது திருவடித் துணையே மன்னுயிர்கட்குப் பிறவியாகிய வெப்பத்தினை நீக்கி வீடுபோறாகிய தண்ணிழலைத் தந்தருளும் என்பது தோன்றத் தாள்நிழல்' என்றார். தவிர்ந்தன்று தங்கியது தாள்நிழல் என்பதற்குச் சிவானுபூபதி எனவும் உலகு என்றது உயர்ந்தோராகிய சிவஞானிகளைக் குறிக்கும் என்பது தோன்றப் பேருலகம் எனவும் இளம்பூரணர் உரைவரைந்துள்ளார். இவரது உரை விளக்கம், நலம் புரிகொள்கைப்புலம் பிரிந்துறையும் செலவு (திருமுருகு. 63) எனவரும் திருமுருகாற்றுப்படைத் தொடரையும் இறைவன் திருவடியே மன்னுயிர்கட்கு வீடுபேறாயிருக்கும் என்ற கருத்தமையத் தென்னன் பெருந்துறையான் . . . . . . தாட்டாமரை காட்டித் தன் கருணைத் தேன்காட்டி (திருவாசகம், திருவம்மானை) என வரும் திருவாசகத் தொடரையும் நினைவு கூரும் முறையில் அமைந்துள்ளமை இங்கு மனங்கொளத் தகுவதாகும்.

“கண்ணி கார்நறுங் கொன்றை காமர் வண்ண மார்பில் தாரும் கொன்றை ஊர்திவால் வெள்ளேறே சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறென்ப கறைமிடறனியலும் அணிந்தன்று, அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே பெண்ணுரு வொருதிறனாகின்று, அவ்வுருத் தன்னுளடக்கிக் கரக்கினும் கரக்கும் பிறை நுதல்வண்ணமாகின்று, அப்பிறை