பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

349


பதினெண் கணனும் எத்தவும்படுமே எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய நீரற வறியாக் கரகத்துத் தாழ்சடைப்பொலிந்த அருந்தவத் தோற்கே”

என்பது புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தாகும். எவ்வகைப் பட்ட உயிர்களுக்கும் காவலாகிய நீர்தொலைவறியாக் குண்டிகையாலும் தாழ்ந்த திருச்சடையாலும் பொலிவு பெற்றுத் தோன்றும் செய்தற்கு அரிய தவத்தையுடையோ னாகிய இறைவனுக்கு “திருமுடிமேற் சூடப்படுங்கண்ணி கார் காலத்து மலரும் நறிய கொன்றைப்பூ, அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் அக்கொன்றைப்பூ: ஏறப்படுவது துயவெளிய ஆணேறு, மிக்க பெருமை பொருந்திய கொடியும் அவ் ஆனேறென்று சொல்லுவர், நஞ்சினது கறுப்பு திருமிடற்றை அழகு செய்தலுஞ் செய்தது, அக்கறுப்பு, தான் மறுவாயிருந்தும் தேவர்களை உய்யக் கொண்டமையால் வேதத்தைப் பயிலும் அந்தணர்களாற் புகழவும் படும். பெண் வடிவு ஒருபக்கம் (இடப்பக்கம்) ஆயிற்று, ஆகிய அவ்வடிவுதான் (ஊழிக்காலத்தில்) தன்னுள்ளே ஒடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும், பிறையானது திருதுதலுக்கு அழகாகியது. அப்பிறைதான் பெரியோன் சூடுதலால் பதினெண் கணங்களாலும் புகழவும் படும் என்பது இதன் பொருள். ‘தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்’ என்பதற்கு, ஒரு பாலாய அப்பெண் வடிவுதான் உலகம் எல்லாம் ஒடுங்கிய ஊழிக்காலத்தில் இறைவன் வடிவினுள்ளே ஒடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும் எனப்பொருள் கொண் பழைய வுரையாசிரியர் தன்னுள் அடக்கிக் ੋ கரக்கும்’ என்பதற்கு இறைவனது ஒரு கூற்றில் தோன்றும் அப்பெண் வடிவுதான் எல்லாப் பொருளையும் தன்னுள்ளேயடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் மறையும்’ என்று உரைப்பினும் அமையும் என்று மீண்டும் கூறிய பொருள் மிகவும் பொருத்தமுடையதாகும். எல்லா வுயிர்க்கும் ஏமமாகிய அருந்தவத்தோன்’ எனச் சிவபெருமானைக் கூறுதலால் எல்லாவுயிர்கட்கும் சார்பாயுள்ளவன் செம்பொருளாகிய அவ்விறைவனே என்பது நன்கு புலனாதல்