பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


"ஓங்குமலைப் பெருவிற் பாம்புநாண் கொளீஇ

ஒருகனை கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றிதந்த கறைமிடற் றண்ணல்” (புறநானுாறு 55)

எனப் புறநானூற்றிற் கூறப்பெற்றது. உயர்ந்த மலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நானைக்கொளுவி, ஒப்பில்லாததோர் அம்பை வாங்கி மூன்று மதிலையும் எய்து பெரிய வலியையுடைய தேவர்க்கு வெற்றியைக் கொடுத்த கரிய திருமிடற்றையுடைய இறைவன் என்பது இப்புறப் பாடற்பகுதியின் பொருளாகும்.

“தேறுநீர் சடைக்கரந்து திரிபுரந் தீமடுத்து’

எனக் கலித்தொகைக் கடவுள் வாழ்த்திலும்,

'அயந்திகழ் நறுங்கொன்றையலங் கலந்தெரியலான்

இயங்கு எயில் எ(ய்)யப் பிறந்த எரிபோல எவ்வாயும் கனைகதிர்தெறுதலின்” (கலித்தொகை 150)

என நெய்தற் கலியிலும் இச்செய்தி குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். பாலை நிலத்தில் கதிரவன் தெறுதலால் மூங்கில் ஒன்றோடொன்று உராய்தலாற்றோன்றி விசும்பளவும் ஓங்கிப் பரந்தெரியு , தீயினுக்கு இறைவன் திரிபுரத்தை எய்கையி னாலே தோன்றி முழங்கும் வெம்மையையுடைய பெருந்தி இங்கு உவமையாகக் கூறப்பட்டது.

கதிரவன் வெப்பத்தால் மலைகள் பிளந்து சிதர்ந்து கிடக்கும் நிலைக்கு முக்கட் பெருமானாகிய சிவபெரு மானது சினத்தால் முட்புரங்களும் நீறாகிச் சிதர்ந்து வீழ்ந்த நிகழ்ச்சியினை உவமையாக எடுத்துக் காட்டும் முறையில் அமைந்தது,

"தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின் கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும் உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின் சீறருங் கணிச்சியோன் சினவலின் அவ்வெயில்