பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


‘பணிவில் சீர்

செல்விடைப்பாகன் திரிபுரஞ் செற்றுழிக் கல்லுயர் சென்னி இமயவில் நாணாகித் தொல்புகழ் தந்தாரும் தாம்” (பரிபாடல் திரட்டு 1)

எனவரும் பரிபாடற் பகுதியால் இனிது விளங்கும்.

கங்கையைச் சடையிற் கரந்தது

பகீரதன் என்பான் தன்குலத்து இறந்த முன்னோர்கள் நற்கதி பெறுதல் வேண்டிக் கடுந்தவம் புரிந்து கொணர்ந்த ஆகாய கங்கையானது, நிலவுலகு தாங்காத பெருவெள்ள மாய்ப் பெருக்கெடுத்து வந்த காலத்துச் சிவபெருமான் அப்பெருவெள்ளத்தைத் தமது செஞ்சடையிற் கரந்தருளி னார் எனப் புராணம் கூறும். இச்செய்தி,

“ளிமலர்த்தாமரையிறை வீழ்த்த பெருவாரி

தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி மணிமிடற்றண்ணல்" (ມຕົ. 9. 4-7)

எனவரும் பரிபாடலிற் குறிக்கப்பெற்றது. “அயனால் வீழ்த்தப்பட்ட ஆகாய கங்கையை மலர்ந்து விழும் பூவை யொப்ப வேகந்தனியச் சடைப்பாரத்தின்கன தாங்கிய ஒப்பில்லாத நிலைமையையுடைய சலதாரியாகிய மணிமிடற் றண்னல்’ என்பது இத்தொடரின் பொருளாகும். சலதாரி (கங்கை நதியாகிய) சலத்தைத் தரிக்கும் இயல்புடையவன்.

"இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடையந்தனன்” (குறிஞ்சிக் கலி ) எனக் கபிலரும், "பிறங்குநீர் சடைக் கரந்தான்” (நெய்தற்கலி 33) என நல்லந்துவனாரும் சிவபெருமான் கங்கையைச் சடையில் தரித்துள்ள அருட்செயலைக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளமை இங்கு நினைக்கத்தகுவ தாகும்.

கூற்றுவனை உதைத்தது

சிவபெருமான் தன்னை அன்புடன் பூசனை புரிந்த