பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

357


அந்தனாளன் ஆகிய மார்க்கண்டேயரது உயிரைக் கவர வந்த கூற்றுவனையுதைத்து மார்க்கண்டேயனாரைச் சாவாது மூவாதிருக்கும்படி உய்வித்தருளினார் என்பது நெடுங்கால மாக நம்நாட்டில் வழங்கி வரும் புராணச் செய்தியாகும்.

காற்றென விரைந்த கரிய எருதினை அதன்வன்மை கெடத்தழுவி நின்ற ஆயனது அழகிய பெருமிதத் தோற்றத் திற்கு, எருமையேற்றினை ஊர்ந்து வந்த கூற்றுவனது மார்பினைக் காலின் விளிம்பிலே தாக்கி யுதைத்து உயிர்கவர்ந்த சிவபெருமானது தோற்றப் பொலிவினை உவமையாகக் கூறும் முறையில் அமைந்தது,

“காற்றுப் போல்வந்த காழ்விடைக் காரியை

யூற்றுக் களத்தே யடங்கக்கொண் டட்டதன் மேற்றொன்றி நின்ற பொதுவன் தகைகண்டை ஏற்றொருமை நெஞ்சும் வடிம்பின் இடந்திட்டுச் சீற்றமோ டாருயிர் கொண்டஞான்று இன்னன்கொல் கூற்றென வுட்கிற்றென் னெஞ்சு” (கலி. 103)

எனவரும் முல்லைக்கலியாகும்.

“காற்றின் விசைபோல ஓடிவந்த விரைந்த ஏறாகிய கரிய காளையினைப் பலரும் வந்து சேர்தற்குரிய களத்திலே வலியடங்கத்தழுவி வருத்தி அதன்மேலே தோன்றி நின்ற ஆயனாகிய வீரனது அழகைப் பாராய், ஏறாகிய எருமைக் கிடாயை ஊர்ந்த கூற்றுவனுடைய மார்பினைத் தன்காலின் விளிம்பாலே தாக்கிப் பிளந்து வீழ்த்திச் சினத்துடனே அவனது அரிய உயிரை வாங்கின அந்நாளில் இறைவன் இத்தன்மையை உடையவனாக இருப்பானோ? என என் நெஞ்சு நடுக்கமுற்றது” எனத் தோழி தலைமகளை நோக்கிக் கூறுவதாக அமைந்தது இப்பாடற் பகுதியாகும்.

சுடர் விரிந்தாற்போன்ற நெற்றிச்சுட்டியையுடைய கரிய காளையொன்று தன்னைத் தழுவிப் பிடிக்க வந்த ஆயனாகிய வீரனைக் குடர் சரியக்குத்தித் தன் கொம்பிலே கொண்டு வருத்தும் தோற்றம், பல்லுயிரும் வருத்தத்தை யணிகின்ற ஊழிமுடிவிலே பசிய நிறத்தைத் தன் இடப்பாகத்