பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


'ஆலமர் கடவுளன்ன நின்செல்வம் (புறம்.198) 'கடவுளாலத்துத் தடவுச்சினைப்பல்பழம் (புறம்.199)

'சீர்மிகு சிறப்பினோன் மரமுதற்கைசேர்த்த

நீர் மலி கரகம் (கலி)

என வரும் தொடர்கள் இப்பெயர் வழக்கினை வலியுறுத்துவன. இறைவனுக்கு அருளுருவம் உண்டென் பதும் குருவாக எழுந்தருளி அம்முதல்வன் உயிர்கட்கு மெய்ப்பொருளை அறிவுறுத்தியருள்வன் என்பதும் இறைவன் குருமேனி தரித்து மெய்ப்பொருளை உபதேசித்தலாலே உலகில் குருவின் வழிமுறை தொடர்ந்து நிலைபெற்று வருகின்றதென்பதும் ஆகியசைவ சமய வுண்மையினை வலியுறுத்தும் நிலையில் அமைந்தது, ஆலமர் செல்வன் திருவுருவமாகும்.

கயிலைக்கடவுள்

செம்மேனியம்மானாகிய சிவபெருமான் வட விமயத்து உச்சியாகிய திருக்கயிலாய மலையில் மலையரையன் மகளாகிய உமாதேவியுடன் எழுந்தருளி யுள்ளான் என்பது சைவ சமயச் சான்றோர் துனிபாகும். கடவுள் என்ற சொல் தெய்வம் என்னும் பொதுப் பொருளில் வழங்குமாயினும் எல்லாவற்றையும் இயக்குவது என்னும் அப்பெயர்க் காரணத்தை நோக்கும் வழி எல்லாம் வல்ல முழுமுதற் பொருளாகிய இறைவன் ஒருவனையே குறிப்பதாகும். 'குவியினர்ப் புல்லிலையெருக்கமாயினும் கடவுள் பேனேம் என்னா" (புறம். 106) எனவும், 'ஆல்கெழு கடவுட் புதல்வ’ (திருமுருகு.) எனவும் வரும் தொடர்களில் கடவுள் என்னும் சொல் முழுமுதற் பொருளாகிய சிவபெருமானைக் குறித்து வழங்கப் பெற்றுள்ளமை கானலாம்.

"கடவுள் நிலைஇய கல்லோங்கு நெடுவரை வடதிசையெல்லை இமயமாக” (பதிற். 43)

எனவரும் பதிற்றுப்பத்துப்பாடலில், 'கடவுள் நிலைஇய