பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நீடிரு விடரகஞ் சிலம்பக் கூய்த்தன் கோடு புய்க்கல்லா துழக்கும்” (கலி. 3)

எனவரும் குறிஞ்சிக் கலியாகும். "இமயமலையை வில்லாக வளைத்து முப்புரங்களையழித்த, கங்கையால் ஈரத்தை யுடையதாகிய சடையினையுடைய இறைவன், உமை யம்மையோடு உயர்ந்த கயிலாய மலையிலே அமர்ந்திருந் தானாக, அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலையையுடைய இராவணன் மலையை எடுத்தற்குக் கையைக் கீழே செருகித் தொடி (வீரவளை) பொலிவு பெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுக்கலாற்றாது வருந்துகின்றவனைப் போல, வன்மை மிகுதியையுடைய புலியினது வடிவையொப்பப் பூத்த வேங்கை மரத்தைப் புலியென மாறுபட எண்ணி அதன் அடியிலே குத்திய மதயானை, நீண்ட மலையின் முழைஞ்சிடமெல்லாம் ஒலிக்கும்படி கூப்பிட்டு பசிய மரத்தில் அழுந்திய தன்கொம்பை மீட்டு இழுக்க முடியாமல் வருந்தும்” என்பது இதன் பொருளாகும்.

ஆதிரைமுதல்வன் சிவன்

திருவாதிரை நாளுக்குரிய தலைவனாகச் சிவபெருமானையும் திருவோண் நாளுக்குரிய தலைவனாகத் திருமாலையும் போற்றுதல் இந்நாட்டில் தொன்றுதொட்டு வரும் வழிபாட்டு மரபாகும். இருபெருந்தெய்வத் தொடர்புடைமை பற்றியே இருபத்தேழு விண்மீன்களுள் ஆதிரை ஒனம் என்னும் இரண்டும் 'திரு' என்னும் அடைமொழி பெற்று வழங்கப்பெறுகின்றன. ஆதிரை விண்மீன்கூட்டம் ஆடவல்லானாகிய கூத்தப் பெருமானது திருவுருவினைப் போன்று விண்ணில் ஒளிர்தலால் அத்திருமேனியிற் காட்சி நல்கும் சிவபெருமானை ஆதிரை முதல்வன் எனச் சங்கநூல்களும் ஆதிரைநாயகன் எனத் திருமுறைகளும் போற்றிப் பரவுகின்றன. மதிநிறை நாளாகிய உவா நாளுடன் தொடர்புடையதாய் வருவது மார்கழித் திருவாதிரையாகும். எனவே மார்கழித் திருவாதிரை நாளில் சிவபெருமானுக்குச் சிறப்புடைய திருவிழா தொன்று தொட்டு நிகழ்த்தப்பெற்று வருகின்றது. திருநாவுக்கரசர்