பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மார்கழித் திருவாதிரை விழாவில் தொடங்கித் தைத்திங்களில் நிறைவுபெறும் மகளிர் நோன்பானது சங்க காலத்தில் தைந்நீராடல் எனவும் பிற்காலத்தில் மார்கழி நீராடல் எனவும் வழங்கப் பெற்றுள்ளது. இதனைத் திருவாதவூரடிகளாகிய மணிவாசகப் பெருமானும் திருமாலடியாராகிய நாச்சியாரும் மார்கழி நீராடல் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். இந்நோன்பின் நிறைவு தைத் திங்களில் முற்றுப்பெறுதல் கருதிச் சங்கச் செய்யுட்களில் தைந்நீராடல் எனவும் மார் கழித் திருவாதிரையினை யொட்டித் தொடங்குதல் பற்றி திருவெம்பாவையிலும், திருப்பாவையிலும் மார்கழி நீராடல் எனவும் வழங்கப் பெறினும் இவை இரண்டும் ஒரு நோன்பினையே குறித்த பெயர்கள் என்பது பதினோராம் பரிபாடலுக்குப் பரிமேலழகர் எழுதியவுரையால் நன்கு துணியப்படும். இந்நோன்பின்கண் கன்னிப்பெண்கள் ஈர்மனலால் சத்திவடிவாகிய பாவையை அமைத்துச் செய்யும் சடங்கு உண்மைகருதி 'அம்பாவையாடல்’ என்பது மருவி 'அம்பாவாடல் எனப் பெயரெய்தியது எனக் கருதுதற்கும் இடமுண்டு.

“வையத்து வாழ்வீர்கள் நாமும் நம்டாவைக்குச

செய்யும் கிரிசைகள் கேளிரோ”

(திருப்பாவை)

ço - - - - - • $3. நாங்கள் நம்பாவைக்குசசாற்றி நீராடினால்

(திருப்பாவை'

  • * * - - - w - e ع ہم 4 ٤ பிள்ளைகள் எலலாரும் பாவைக களமபுககாா

(திருப்பாவை)

என வரும் திருப்பாவைத் தொடர்களால் இந்நீராடல் நோன்பில் அழகிய பாவைக்குச் செய்யும் சடங்குண்மை நன்கு புலனாகும். இங்ங்னம், கன்னிப் பெண்கள் நீராடி நோன்பு நோற்றலின் நோக்கம், நாடுமலியமழை பெய்து நோயும் துன்பமும் நீங்கி இவ்வுலகம் இன்புறுதல் வேண்டும் என இறைவனது அருள்வடிவாகிய அம்மையை வழிபட்டு நலம் பெறுதலே எனபதனை,