பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

375


“பாரதியாடிய பாரதியரங்கத்துத் திரிபுரமெரியத் தேவர்வேண்ட எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ட உமையவள் ஒருதிறனாக ஓங்கிய இமையவன் ஆடிய கொடுகொட்டி யாடலும்”

(சிலப். கடலாடு, 39-43)

என்ற தொடரால் இளங்கோவடிகள் விரித்துக் கூறியுள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். 'திரிபுரம் திமடுத்து எரியக்கண்டு இரங்காது கைகொட்டி நின்று ஆடுதலின் கொடுகொட்டியென்று பெயர் கூறினார்" என்பர் அடியார்க்கு நல்லார்.

பண்டரங்கம் என்றது, பாண்டரங்கம் என்னும் ஆடலை. இதன் இயல்பினை,

“தேர்முன் நின்ற திசைமுகன்காண்ப்

பாரதியாடிய வியன்பாண்டரங்கமும்”

(சிலப். கடலாடு. 44, 45)

என்ற தொடராற் குறித்தார் இளங்கோவடிகள். “வானோ ராகிய தேரில் நான் மறைக் கடும் பரிபூட்டி நெடும்புற மறைத்து வார்துகில் முடித்துக் கூர் முட் பிடித்துத் தேர்முன் நின்ற திசைமுகன் காணும்படி பாரதி வடிவாகிய இறைவன் வெண்ணிற்றையணிந்தாடிய பாண்டரங்கக் கூத்தும்” என இத்தொடர்க்கு உரை வரைந்தார் அடியார்க்கு நல்லார். முப்புரங்களைவென்று அந்த வலியாலே முப்புரத்து அவுனர்கள் வெந்து வீழ்ந்த நீற்றை அணிந்து இறைவன் ஆடுதலினாலே இக்கூத்து பாண்டரங்கம் என்னும் பெயர்த்தாயிற்று எனவும் பாண்டரங்கம் என்பதே பண்டரங்கமென விகாரமாயிற்று எனவும் கருதுவர் நச்சினார்க்கினியர். -

'ஏறமர் கடவுள் மூவெயில் எய்வுழிக்

கூறுகூறாகக் கொடியொடும் படையொடும் வேறுவேறுருவின் விண்மிசைப் பரந்தனர் அவ்வழி ஒளியொடும் உருவொடுந் தோன்றித்