பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


மீட்டுத் தன்பால் ஒடுக்கிக் கொள்ளுதலாகிய செயலினை உவமையாக எடுத்துக்காட்டி விளக்கும் முறையில் அமைந்தது,

"தொல்லு N தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தாற்

பல்வயின் உயிரெல்லாம் படைத்தான் கட்பெயர்ப்பான் போல்

எல்லுறு தெறுகதிர் மடங்கித் தன் கதிர்மாய” (கலித். 129)

எனவரும் நெய்தற்கலியாகும். 'பழையதாகிய ஊழித் தொடக்கத்திலே பலவிடங்களிலும் பரவிவாழ உடம்போடு உயிர்களைத் தடுமாறி மீட்டும் தன்னிடத்தே வந்து ஒடுங்குதலை விரும்பும் ஊழிமுடிவிலே பலவடிவுகளையும் தன்னிடத்தே மீட்டு ஒடுக்கிக் கொள்கின்றவனைப் போலே, கதிரவன் தன்னிடத்தினின்றும் தோன்றிப் புறத்தே பரவிப் பகற்பொழுதில் தெறுகின்ற தன் ஒளிக்கதிர்களைத் தன்னிடத்தே மீட்டுக்கொண்டு மறைய” என்பது மேற்குறித்த தொடரின் பொருளாகும்.

அவனென்றும் அவளென்றும் அதுவென்றும் இவ்வாறு அவயவப் பகுப்புடையதாய்ச் சுட்டியுணரப்படும் உலகத்தொகுதியானது தோன்றுதல் நிலைபெறுதல் அழிதல் என்னும் முத்தொழிற்படுதலால் அஃது ஒருவினை முதலால் கோற்றுவிக்கப்பட்ட உள்பொருளே எனவும், அதுதான் மலம் நீங்காமையால் அது நீங்குதற்பொருட்டுத் தான் ஒடுங்குதற்கு ஏதுவாயிருந்த கடவுளால் மீளவும் உளதாம் எனவும், எனவே ஒடுக்குதலாகிய சங்காரத் தொழிலைச் செய்யும் கடவுளே உலகிற்கு முதற்கடவுள் எனவும் அறிவுறுத்துவது,

"அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்

தோற்றிய திதியே ஒடுங்கிமலத்துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர்”

எனவரும் சிவஞான போத முதற்குத்திரமாகும். இந்நூலின் ஆசிரியராகிய மெய்கண்ட தேவர், “இச்சூத்திரம் என்னுதலிற்றோவெனின், சங்கார காரனனாயுள்ள முதலையே முதலாகவுடைத்து இவ்வுலகம் என்பது