பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

379


உணர்த்துதல் நுதலிற்று” என இம்முதற் சூத்திரத்திற்குக் கருத்துரை வரைந்துள்ளார். ஆசிரியர் மெய்கண்டார் சிவஞான போத முதற்குத்திரத்தில் ஏது எடுத்துக்காட்டுக் களுடன் விரித்து விளக்கும் சைவசித்தாந்தத் தத்துவ வுண்மையாகிய இக்கொள்கைக்குப் “படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ, கொடுகொட்டி ஆடுங்கால்” எனக் கலித்தொகைக் கடவுள் வாழ்த்திலும் "பல்வயின் உயிரெல்லாம் படைத்தான் கட் பெயர்ப்பான்போல்” என நெய்தற்கலியிலும் வரும் தொடர்கள் ஆதாரமாக அமைந்துள்ளமை இங்கு ஒப்புநோக்கியுணர்தற்குரியதாகும். இறைவன் படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிற்கும் உரிய்னாயினும் ஊழிமுடிவில் யாவராலும் செய்ய இயலாத முற்றழிவாகிய மகாசங்காரத் தொழில் அவனொருவனாலேயே செய்தற்குரியதாதலின் அதுபற்றி அமீமுதல்வனைக் காஅய் கடவுள் (பரி. என்றும் 'கொலைவன்’ (கலி.) என்றும், கூற்று (கலித்.) என்றும் சங்கச் செய்யுட்கள் குறித்துள்ளன.

முக்கண்ணான்

ஞாயிறு, திங்கள், தி என்னும் முச்சுடர்களைக் கண்களாக வுடையவன் இறைவன் ஆதலின் முக்கண்ணான் என்பது அவற்குரிய திருப்பெயராயிற்று. "முக்கண்னான் மூவெயிலும் உடன்றக்கால் முகம்போல ஒண் கதிர் தெறுதலின்” (கலித். 1) எனக் கலித்தொகையிலும் "பணியிய ரத்தை நின்குடையே முனிவர், முக்கட்செல்வர் நகர்வலஞ் செயற்கே’ (புறம். 6) எனப் புறநானூற்றிலும் இப்பெயர் பயின்றுள்ளமை காணலாம். மூன்று கண்களுள் வலக்கண் ஞாயிறு. இடக்கண் திங்கள். நடுவேயுள்ளது தீயினுருவாகிய நெற்றிக் கண்ணாகும். நெற்றிக் கண்ணாகிய இது ஏனைய இரண்டு கண்களைப் போல் நெற்றியின் கீழ் இருபக்கங்களிலும் படுத்த நிலையிலமையாது நிமிர்ந்து நின்ற நிலையில் இருத்தலால் ஏனைத்தேவர் கண்களினின்றும் வேறுபாடுடையதாய் உயர்ந்து விளங்கும் தன்மையினையுடையதாகும். இதன் இயல்பினை,

“கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்