பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


செல்லும் தூய உயிரான பசுவையும், அதன் பின்னேயுள்ள பலிபீடம் பசுவினால் தொடர்பறுத்துக் கழிக்கப்பட்ட ஆணவமலாமாகிய பாசத்தையும் உயர்த்துவன என்பது மேற்குறித்த திருமந்திரத்தாற் புலனாகும்.

திருமூலநாயனார் காலத்துக்கு ஆயிரம் யாண்டு பிற்பட்ட காலப்பகுதியிலே சிவாகமங்களை வடமொழியில் எழுதிக் கோயிற் குருக்கள்மார் சிவபிரான் திருக்கோயில்களைச் சிவனடியார்களின் நெஞ்சத்தாமரையின் வடிவாகவும், அவர்களுடைய பருவுடம்பு, நுண்ணுடம்பு மூலவுடம்புகள் ஆகியவற்றின் அமைப்புடையதாகவும் அமைக்கும் முறைகளையும், அவற்றின்கண் வைகும் பரிவாரத் தெய்வங்களையும் அவற்றை வழிபடும் பூசனை முறைகளையும் மேலும் மேலும் பெருக்கி வரையலாயினர். ஆதிசைவக்குருக்கள்மார் பிற்காலத்திற் பெருக்கி வளர்த்த சிவாகம முறைகளின்படி அமைக்கப்பெற்ற சிவபிரான் திருக்கோயில்கள் தென்றமிழ் நாட்டில் மிகுதியாக வுள்ளன. இம்முறையிலன்றி இடைக்கால முறைப்படி சிவலிங்கம் நந்தி பலிபீடம் என்னும் மூன்று மட்டுமே வைத்து அமைக்கப்பட்ட பழைய கோயில்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. நந்தியும் பலிபீடமும் இல்லாமல் சிவலிங்கம் ஒன்று மட்டுமேயுள்ள மிகப்பழைய கோயில்க்ள் சிலவும் அருகிக் காணப்படுகின்றன என மறைமலையடிகளார் கூறும் தமிழகக் கோயிலமைப்பு முறை நுணுகி ஆராயத்தகுவதாகும்.

"சுவேதாரனியத்தில் உருத்திரனால் எரிக்கப்பட்டுயமன் மாய்ந்தாற்போலக் கரன் இராமனுடைய எரியம்பினால் தாக்கப்பட்டு இறந்தான்” என்ற செய்தி வான்மீக இராமாயணத்திற் குறிக்கப்பெற்றது. இதற்கு உரைவரைந்த தீர்த்தர் என்பவர், பழைய காவிரிப்பூம்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருவெண்காடே சுவேதாரணியம் என்பது’ என்று விளக்கம் தந்துள்ளார். இதனால் காவிரிப்பூம் பட்டினத்தின் அருகிலுள்ள திருவெண்காடு என்ற ஊர், வான்மீகர் காலத்திலேயே சிவபெருமானுக்குரிய திருக் கோயிலைப் பெற்று விளங்கியது என்பது நன்கு புலனாகின்றது.