பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பவளத்தினாலும் செய்தமைத்த பொற்பூணினை இளங் குழந்தைகட்குக் காப்பாக அணிவதென்பது சங்ககாலந் தொட்டுத் தமிழ் மக்களிடையே நிலவி வரும் பழக்கமாகும். இச்செய்தி,

"பூண்டவை,

எறிய வாளும் எற்றாமழுவும் செறியக்கட்டி ஈரிடைத் தாழ்ந்த பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின் மையற விளங்கிய ஆனேற்று அவிர்பூண்” (கலித் 85)

எனவும்,

“பொலஞ்செய் மழுவொடு வாளனிகொண்ட

நலங்கினர் ஒண்பூண்” (கலித். 86)

எனவும் வரும் மருதக் கலித்தொடர்களால் இனிது விளங்கும். "பூண்டவை, வெட்டாத வாளும் வெட்டாத மழுவும் நெருங்கக்கட்டி, இரண்டு புறத்தினும் தங்கின மழைபெய்த நிலத்துப் பரவிய ஈயல் மூதாயினது (பட்டுப்பூச்சியினது) புகரையுடைத்தாகிய நிறத்தையுடைய பவளத்தாற் செய்த அழுக்கற விளங்கிய இடபத்தையுடைய விளங்குகின்ற பூண்” என்பதும், "பொன்னாற் செய்த மழுவோ.ே வாளும் அணிதலைக்கொண்ட நன்றே விளங்குகின்ற ஒள்ளிய பூண்” என்பதும் இவ்விரு தொடர்களின் பொருளாகும்.

சிவனுக்குரிய அடையாளப்பூ கொன்றைமலர்

பொன்போலும் நிறத்தினதாய்க் கொத்தாக மலரும் கொன்றைமலர் மாலை இறைவனுக்குரியதாகும்.

“கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்” (அகம். கடவுள்) “கண்ணி கார்நறுங்கொன்றை காமர் வண்ணமார்பில் தாரும் கொன்றை” (புறம். கடவுள்)

'அயந்திகழ் நறுங்கொன்றையலங்கலந் தெரியலான்” (கலி, 150)