பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

383


‘மணிமிடற்று மாண்மலர்க் கொன்றையவன்” (கலி. 143)

என்றாங்குவரும் சங்க இலக்கியத் தொடர்கள் சிவபெருமானுக்குச் சிறந்தது கொன்றை மலர்மாலை என்பதனை அறிவுறுத்துவன, கொன்றை பொன்னார் மேனியனாகிய சிவபெருமானைப் போன்று பொன்னிறம் வாய்ந்த பூவாகும். ஐந்திதழ்களையுடைய இம்மலர் சிவபெருமானுக்குரிய மந்திரமாகிய திருவைந்தெழுத்தின் அடையாளமாகும். இவ்விதழ்களின் மேலாகத் தமிழ் ஒகாரவெழுத்தமைப்பில் திருவாசிபோல் வளைந்துள்ள முனை ஓங்காரமாகிய பிரணவத்தின் அமைப்புடையது. இவ்வாறு திருவைந்தெழுத்தின் அமைப்பில் உருவும் நிறமும் வாய்ந்த கொன்றைமலர் ஐந்தெழுத்தின் உருவாகி நின்ற இறைவனுக்குரிய அடையாளப்பூவாயிற்று என்பர் பெரியோர்.

மாலொருபாகர் (சங்கரநாராயணர்}

அந்திவானம் போன்ற திருமேனியன் சிவபெரு மானும் கடல்நிற வண்ணனாகிய திருமாலும் ஆகிய இருபெருந் தெய்வத்திருமேனியும் ஒருருவாய் உட னியைந்து தோன்றும் திருவுருவம் சங்கரநாராயணர் (மாலொருபாகர்) திருமேனியாகும். கொடியோர் அஞ்சுதற்குக் காரணமான பேராற்றல் வாய்ந்த செம்மேனி யிறைவனாகிய சிவனும்கரிய திருமேனிய னாகிய திருமாலும் ஒருருவினராய்த் திகழும் தோற்றம் போல அந்தி வானமும் கருங்கடலும் ஒருங்கியைந்து அழகுபெற்றுத் தோன்றும்படி மாலைக்காலம் வந்தது என்பார்,

“வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து

உருஉடனியைந்த தோற்றம் போல அந்திவானமொடு கடல் அணிகொளாஅ

வந்த மாலை” (அகம், 360)

என்றார் மதுரைக் கண்னத்தனார் என்னும் புலவர் பெருமான். சங்ககாலத்தில் உமையொருபாகர் திருமேனியைப் போன்று மாலொருபாகர் (சங்கர