பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

385


"தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவுஞ் சக்கரமும் குழரவும் பொன்னணுத் தோன்றுமால் சூழும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து”

(இயற்பா, மூன்றாந்திருவந்தாதி 63)

எனப் பேயாழ்வாரும் அருளிய அருளிச் செயல்கள் சங்கரநாராயணர் திருவுருவ அமைப்பினை நன்கு புலப்படுத்துவனவாகும்.

அட்டமூர்த்தி (எண்பேருருவினன்)

ஈசனாகிய சிவபெருமான் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஞாயிறு, திங்கள், வேள்வித் தலைவனாகிய ஆன்மா என எண் பேருருவினனாக உலகுயிர்களோடு பிரிவின்றிக் கலந்து விளங்குகின்றான் என்பது சிவநெறியாளர்க்ள் தாம் வழிபடும் இறைவனுக்குக் கூறும் சிறப்புடைய இலக்கணமாகும்.

“மாஅயோயே மன அயோயே,

மறுபிறப்புறுக்கும் மாசில்சேவடி மணிதிகழுருவின் மாஅயோயே!” (பரிபாடல் 3)

எனத் திருமாலை எதிர்முகமாக்கிப் போற்றத்தொடங்கிய கடுவன் இளவெயினனார் என்னும் புலவர் பெருமான் திருமாலும் சிவனும் ஒருமுழுமுதற்பொருளே என்னும் ஒருமையுணர்வுடன் சிவபெருமானுக்குரிய அட்ட மூர்த்தவடிவினைத் திருமாலுக்கு ஏற்றிக் கூறுவதாக அமைந்தது,

"தீவளிவிசும்புநிலன் நீர் ஐந்தும்

ஞாயிறும் திங்களும் அறனும்” (பரி.3:4,5)

எனவரும் பரிபாடற்றொடராகும். அச்சேவடி (மறுபிறப் பறுக்கும் மாசில் சேவடி) கூறுதற்கு முகம் புகுகின்றாராதலிற் பலகாலும் எதிர்முகமாக்கினார்; ஆக்கி வாழ்த்துகின்றவர் அவன்கண் தோன்றிய பொருள்கள் கூறுவான் தொடங்கி,

சை. சி. சா. வ. 25