பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஈசற்கு (சிவபெருமானுக்கு தீவளி விசும்புநிலம் நீர் என்னும் பூதங்கள் ஐந்தும் ஞாயிறும் திங்களும் வேள்வி முதல்வனும் என இவை, வேட்கின்ற வடிவு தருமமாதலின் அஃது அறனெனப்பட்டது” எனப் பரிமேலழகர் தரும் உரை விளக்கம் அட்டமூர்த்தி வடிவம் சிவனுக்குச் சிறந்து எடுத்துக் கூறப்படுவது என்பதனை நன்கு வலியுறுத்துவ தாகும்.

சிவபெருமானுக்குத் திருமுகங்கள் ஐந்து

சிவபெருமானுக்கு ஐந்து திருமுகங்கள் உள்ளன என்பதும் ஐந்து திருமுகங்களையுடைய அம்முதல்வனே உலகுயிர்களைத் தன் கண் ஒடுக்கவல்ல பேராற்றல் படைத்தவன் என்பதும் அவ்விறைவன் திருமாலாகவும் திகழ்கின்றான் என்பதும்

“ஐந்தலை யுயரிய அணங்குடை யருந்திறல்

மைந்துடை யொருவனும் மடங்கலும் நீ" (பணி. 1)

எனத் திருமாலைப்போற்றும் பரிபாடற் பகுதியாலும், "ஐந்துதலையைத் தோற்றுவித்த அணங்குடை அருந் திறலையுடைய . . . ஈசன், மடங்கல்-அவனினாகிய உலகுயிர்களின் ஒடுக்கம்” எனவரும் பரிமேலழகர் உரைக் குறிப்பானும் அறியப்படும்.

வாய்மைப் பொருள் சிவன்

சிவபெருமான், தன்னை வணங்கிக்கேட்போர் யாவராயினும் அவர்கேட்ட வரங்களை மாறாது கொடுத் தருளுதலில் தவறாத வாய்மையுடையன் என்பது, அம் முதல்வனைக் குறித்து வழங்கும் புராணங்களால் அறியப் படும். அம்முதல்வன் உமாதேவியைத் திருமணம் புரிந்து கூடியிருக்கும் காலத்திலே இந்திரன் வந்து அப் பெருமானிடம் ஒருவரம் கேட்டு “உமையொடு கூடிய புணர்ச்சியால் தோன்றிய கருவை அழிப்பாயாக’ என வேண்ட மழுப்படையைத் தரித்த இறைவன் வர்ய்மையில்