பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

387


தவறாதவனாதலின், "அவ்விந்திரனுக்குத் தான் கொடுத்த வரத்தைச் செய்தற்கரிதென மாற்றாமல் ஏழுலகத்தவர்களும் வியக்க அதனுருவினைப் பல கண்டமாகச் சேதித்தான்” என ஐந்தாம் பரிபாடலிற் கூறிய செய்தி முன்னர் முருகனைப் பற்றிய செய்திகளில் எடுத்துக்காட்டப்பட்டது. ஆலின்கீழ் அறமுரைத்த அருந்தவமுதல்வனாகிய சிவபெருமானே யார்கண்ணும் ஐயந்திர மெய்ப்பொருளை யறிவுறுத்தி எக்காலத்தும் பொய்கூறா வாய்மையனாகத் திகழ்கின்றான் என்பது,

"ஜயந்திர்ந்தியார்கண்ணும் அருந்தவ முதல்வன்போல்

பொய்கூறாய் என நின்னைப் புகழ்வது” (கலி. 300)

என வரும் மருதக்கலியாலும் "அரிய தவத்தையுடைய அறமுரைத்த நாயன்ாரைப்போல யாவரிடத்தும் பொய்கூறாய் என ஐயம் அற்று உலகம் நின்னைப் புகழ்கின்ற தன்மை” எனவரும் அதன் உரையாலும் அறிவுறுத்தப் பெற்றது

ஈறிலாதவன் இறைவன்

எவ்விடத்தும் எக்காலத்தும் மாறாதுள்ள நிலையை சத்து என்னும் செம்பொருளுக்கு இயல்பாகவுள்ள தன்மையாகும். செம்பொருளாகிய சிவம் எக்காலத்தும் திரியின்றி அழியாது உள்ளது. ஆதலின் அதற்குப் பிறப்பும் இல்லை இறப்புமில்லை என்பதும் அது தோற்றமும் ஈறுமில்லாத முழு முதற்பொருள் என்பதும் சிவநெறியாளர் துணியாகும். அதியமான் நெடுமானஞ்சி என்னும் வள்ளல் சாதலைத் தடுத்து நீண்டநாள் வாழச் செய்வதும் பெறுதற்கு அரியதும் ஆகத் தான்மலையுச்சியிற் கொண்ட நெல்லிக் கனியின் ஆக்கத்தினை வெளிப்படுத்தாமல் ஒளவையார்க் குக் கொடுத்தானாக அதனையுண்டு. அதன் விளைவினை அறிந்துகொண்ட ஒளவையார் தன்பால் அதியமான் கொண்டுள்ள பேரன்பினையும் பெருமதிப்பினையும் எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்து அவனை வாழ்த்துவதாக அமைந்தது,