பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


“வலம்படுவாய்வாள் ஏந்தி ஒன்னார்

களம்படக் கடந்த கழல்தொடித்தடக்கை ஆர்கலிநறவின் அதியர் கோமான் போரடுதிருவிற் பொலந்த்ார் அஞ்சி பால்புரை பிறைநுதற்பொலிந்த சென்னி ാങ്ങി மிடற்றொருவன் போல மன்னுகபெரும நீயே தொன்னிலைப் பெருமலை விடரகத்தருமிசைக் கொண்ட சிறியிலை நெல்லித்தீங்கனி குறியாது ஆதல்நின்னகத்தடக்கிச சாதல்நீங்க எமக்கித் தனையே’ (புறம். 91)

எனவரும் புறநானூற்றுப் பாடலாகும். "மாற்றாரைப் போரின்கண் கொல்லும் வீரச் செல்வத்தினையுடைய அதியர்கோமான் நெடுமானஞ்சியே, நீ பெரிய மலையின் உச்சிக்கண் கொள்ளப்பட்ட அரிய இனிய நெல்லிக் கனியைப் பெறுதற்கு அரிதென்று கருதாது அதனாற் பெறும் பேற்றினை எமக்குச் சொல்லாது நின்னுள்ளே அடக்கி எமக்குச் சாதல் நீங்க அளித்தாய்; ஆதலால் பால்போலும் பிறைநுதலிடத்தே பொலிவுபெற்றுத் தோன்றும் திருமுடியையும் நீலமணிபோலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒப்பற்ற முதல்வனாகிய சிவபெருமானைப் போல என்றும் நிலைபெற்று வாழ்வாயாக’ என இப்பாடலால் அதியமானை வாழ்த்து கின்றார் ஒளவையார். 'நீலமணிமிடற்று ஒருவன் போல மன்னுகபெரும என வாழ்த்தியதன் குறிப்பு, சிவபெருமான் எக்காலத்தும் அழிவின்றி நிலைபெறுமாறு போல நீயும் அழிவின்றி நிலைபெறுக என்பதாம். 'நீலமணிமிடற் றொருவன் போல’ என்ற கருத்து, சாதற்குக் காரணமான நஞ்சுண்டும் நிலைபெற்றிருந்தாற்போல நீயும் சாவா திருத்தல் வேண்டும் என்பதாம் எனப் புறநானூற்றின் பழைய வுரையாசிரியர் இக்குறிப்பினைப் புலப்படுத்தலால் நீலமணி மிடற்றொருவனாகிய ஈசனே என்றும் அழிவின்றியுள்ள முழு முதற் கடவுள் என்பது அதியமானை வாழ்த்திய ஒளவையார் துணிபாதல் நன்கு தெளியப்படும். ஒளவையார் பாடிய இப்பாடலை அடியொற்றியமைந்தது. ஈறிலாதவன்