பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பெருந்தேவனார்.

மூவகையுலகம் ஆவன மேல், நடு, கீழ் என முப்புணர் அடுக்கிய உலகத் தொகுதிகள். மூவகை யுலகங்களும் எவ்வேழுவகைப்பட்டுள்ளன என்பது, மூவே ழுலகமும் உலகினுள்மன்பதும் (பரிபாடல் 9) என்பதனாற் புலனாம். மூவேழுலகம் - ஒரோவொன்று எழுவகைப் பட்ட மூன்றுலகம். மன்பது ஒழிந்த உயிர்ப்பன்மை’ என்பர் பரிமேலழகர். இனி, 'மூவகையுலகு என்பதற்கு, 'அவன் அவள் அதுவெனும் அவயவப்பகுப்புடையனவாய்ச் சுட்டியுணரப்படும் உலகத்தொகுதி எனப் பொரு ளுரைத்தலும் பொருந்தும். அவன் அவள் அது வெனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே (சிவஞான போதம், சூத்திரம்) என்றார் மெய்கண்டார். ஒருவன் என்றும் ஒருத்தியென்றும் ஒன்றென்றும் கூறப்படும்.

அவயப்பகுப்புடையதாயும் பல்வேறு வகைத்தாய்ச் சடமாயும் சுட்டியறியப் படுவதாயும் இருத்தலின் இம்மூன்று ஏதுக்களாலும் காணப்படும் உலகம், தோன்றிநின்று அழிதலாகிய முத்தொழிற்படும் உள்பொருளேயாம் என்பது இத்தொடரின் பொருளாகும்.

சிவபெருமானைப் போற்றிப்பரவும் முறையிற் பெருந்தேவனார் பாடியுள்ள கடவுள் வாழ்த்துப் பாடல்களில், நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்', 'யாழ் கெழு மணிமிடற்று அந்தனன்”, “தாழ்சடைப்பொலிந்த அருந்தவத்தோன்' எனவரும் தொடர்கள் கடவுளுண்மை யினையும், 'மூவகையுலகும் முகிழ்த்தனமுறையே', 'தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே எனவரும் தொடர்கள் உலகின் உண்மையினையும், 'மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும்', 'எல்லாவுயிர்க்கும்’ எனவரும் தொடர்கள் உயிர்களின் உண்மையினையும் புலப்படுத்தி நிற்றல் காணலாம். எனவே கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருள்களும் தோற்றமில் காலமாக (அநாதியாக) உள்ள பொருள்களே என்னும் சைவ சித்தாந்தத் தத்துவத் துக்குரிய வேர்கள் (மூலங்கள்) சங்கச் செய்யுட்களாகிய