பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

397


எனவரும் முல்லைப்பாட்டடிகளாற் புலனாகும்.

சிவபெருமானை வழிபடுவோராகத் தேவார ஆசிரியர்களாற் குறிக்கப்படும் அகச்சமயத்தார் அறுவருள் அவிர்சடைமுனிவர் வழியொழுகும் திருவேடமுடையார் விரிசடை விரதிகள் எனவும், முக்கோலந்தனர் வழி யொழுகும் தவவேடமுடையார் அந்தணர் எனவும் கொள்ளுதல் ஏற்புடையதாகும்.

வடக்கிருத்தல்

உலகவாழ்க்கையில் தாம் செய்துமுடிக்க எண்ணிய அருஞ்செயலை இப்பிறப்பில் நிறைவேற்ற முடியாத நிலையினை அடைந்தவர்களும் ஆருயிர் நண்பரை யிழந்தவர்களும் பிறவிப்பினிப்பினை நீத்து உயர்ந்த வுலகமாகிய வீடுபேற்றினை விரும்பி இவ்வுலக வாழ்க்கை யினைத் துறந்து உண்ணாநோன்பினை மேற்கொண்டு புண்ணியத்திசை யெனப்படும் வடதிசையினை நோக்கி ஓரிடத்து. அமர்ந்திருந்து ஊனினுள் உயிரைவாட்டித் தம்முள்ளத்துள்ளே மெய்ப்பொருளை இடைவிடாது நினைந்திருந்து தம் உயிரைத்துறப்பர். வடதிசையினை நோக்கி மெய்ப்பொருளை நினைத்து உண்ணா நோன்பினராய்த் தமது உயிரைத் துறந்து வீடுபெறும் இத்தவ நிலை வடக்கிருத்தல் என்ற பெயராற் புறநானூற்றிற் குறிக்கப் பெற்றுள்ளது. உண்ணாநோன்பிருந்து உயிர் துறத்தல் சமண்சமயச் சான்றோர்களால் மேற்கொள்ளப் படுவது. எனினும் வடக்கு நோக்கித் தியானத்தில் இருத்தல் வேண்டும் என்னும் நியதி அவர்கட்கு இல்லை. தமிழகத்தின் தென்பகுதி கடலாற்கொள்ளப்பட்டு அத்திசை அழிவிற்கு இடமா னமையின் தென்திசை கூற்றுவன் திசையெனவும் தெற்கே குமரி கடலாற் கொள்ளப்பட்ட காலத்து வடக்கே இமயம் உயர்ந்து தோன்றி இடந்தந்தமையின் வடதிசை புண்ணிய திசையெனவும் மக்களாற் கருதப்படுவன வாயின. அன்றியும் இமயம் சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலைச் சிகரத்தைத் தன்கண் கொண்டமையாலும் அம்முதல்வன் ஆலின்கீழ் முனிவர்கட்கு அறமுரைத்த ஞான்று தென்திசை