பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நோக்கியிருந்தமையாலும் உலகப் பற்றினைத்துறந்து வீடெய்த விரும்பும் பெருமக்கள் வடதிசை நோக்கியிருந்து மெய்ப்பொருளை இடைவிடாது சிந்தித்திருந்து உயிர் துறத்தலைத் தமக்குரிய தவநோன்பாகக் கொண் டொழுகினர் எனக் கருதவேண்டியுள்ளது. உண்ணா நோன்புடையராம் வடக்கிருத்தலை மேற்கொள்வோர் வெயில் வெப்பந்தாக்காது ஆற்றிடைக்குறையினையும் சோலையினையும் வடக்கிருத்தற்குரிய இடமாகக் கொண்டனர். இதனைக் கூர்ந்து நோக்குங்கால் சுடுபாறையிற் கிடத்தல் முதலாக உடம்பினை வருத்தும் முறைகளைக் கொண்ட சமணரது உண்ணாநோன்பின் வேறுபட்டது வடக்கிருத்தலாகிய இந்நோன் பென்பது நன்கு புலனாகும்.

சேரமான் பெருஞ்சேரலாதன், சோழன் கரிகாற் பெருவளத்தானோடு வெண்ணிப்பறந்தலையிற் போர் செய்த நிலையில் கரிகாற்பெருவளத்தான் எய்த அம்புத் தன்மார்பில் தைத்து ஊடுருவிப்புறத்துச் சென்றநிலையில் தன்முதுகில்புறத்து உண்டாகிய புண் புறப்புண்ணாதலை யொக்கும் என நாணி வாளொடு வடக்கிருந்து உயிர் துறந்தனன் என்ற செய்தி புறநானூறு 65, 66ஆம் பாடல்களில் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. தன்மக்க ளொடு மாறுபட்டுப் போர்மேற் சென்ற கோப்பெருஞ் சோழன் புல்லாற்றுார் எயிற்றியனார் என்னும் புலவர் பெருமானால் தெருட்டப்பட்டு உள்ளந் தெளிந்து வடக் கிருந்து உயிர்துறந்தான் என்பதும் அவன் நினைத்த வண்ணம் அவனுடைய ஆருயிர் நண்பர் பிசிராந்தையாரும் ஆங்கு விரைந்துவந்து அவனுடன் வடக்கிருந்து உயிர் துறந்தார் என்பதும் மன்னன் பணித்த வண்ணம் இல்லறக் கடமை முடிந்தபின் மன்னன் நடுகல்லின் அருகே வடக்கிருந்து உயிர்துறந்தார் என்பதும் புறநானூறு 213, 215, 216, 217, 218, 219, 223ஆம் பாடல்கள்ாற் புலனாகும். பாரிவேள் இறந்த பின்னர் அவனுடைய ஆருயிர் நண்ப ராகிய கபிலர் என்னும் புலவர் பெருமான் பாரி மகளிரைப் பார்ப்பாரிடத்தே அடைக்கலமாக ஒப்புவித்துத் திருக்கோவ லூரிற் பெண்ணையாற்றின் நடுவே வடக்கிருந்து உயிர்