பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

399


துறந்தார் என்பது 236 ஆம் புறப்பாட்டாலும் அதன் அடிக்குறிப்பாலும் திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் திருக்கோயிலிற் பொறிக்கப்பெற்றுள்ள முதல் இராசராச சோழன் காலத்துக் கல்வெட்டாலும் நன்கு விளங்கும்.

அறஞ்செய்தலின் இன்றியமையாமை

வடக்கிருந்து உயிர்துறக்க முற்பட்ட கோப்பெருஞ் சோழன் பாடிய 214ஆம் புறப்பாடல் இருவினைப்பயனும் மறுபிறப்புண்மையும் பற்றித் தமிழ்முன்னோர் கொண்ட நம்பிக்கையைப் புலப்படுத்துவதாகும். நல்லறஞ் செய் வோர்க்கு மறுமையில் வானுலகநுகர்ச்சியும் அந் நுகர்ச்சி யில் விருப்பில்லையெனில் மீண்டும் பிறவாமையாகிய பேறும், இம்மையில் நீண்ட புகழும் உண்டாகும் எனக் கூறுமுகத்தால் நல்லறஞ் செய்தலின் இன்றியமையாமை யினை மறுபிறப்பில் நம்பிக்கையில்லாதவர்களும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் அறிவுறுத்துவது இப்பாடலாகும்.

பாரி வள்ளலின் பிரிவாற்றாது வடக்கிருந்த கபிலர் பாரியை நினைந்து பாடிய பாடலில்,

"இம்மைபோலக் காட்டி உம்மை இடையில் காட்சிநின்ன்ோடு உடனுறைவாக்குக உயர்ந்த பாலே" (புறம்.236)

எனத் தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். “பெரிய வண்மையையுடைய பாரியே, இப்பிறப்பின்கண் நீயும் யானும் தோழமையாற் கூடியின்புற்றாற் போலக்காட்டி, மறு பிறப்பினும் தடைபடாது பேரறிவினையுடைய நின்னோடு கூடி வாழ்தலை உயர்ந்த நல்லூழ் கூட்டுவதாகுக” என நல்லுழின் விளைவையெண்ணி ஆறுதலடையும் நிலையில் அமைந்தது இப்பாடலாகும்.

"வாழச் செய்த நல்வினை யல்லது

ஆழுங்காலைப்புணைபிறிதில்லை” (புறம். 367)

எனவரும் ஒளவையார் வாய்மொழி இங்கு நினைத்தற்