பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

401


சான்றோர் சென்ற நெறியிது வெனக்கொண்டு அறம் புரிதலே மெய்யுணர்ந்தோர் கடமையாகும். இக்கடமை யினை யுணர்ந்து நல்லறம் செய்பவன் ஆய் என்னும் வள்ளல் என்பதனை,

'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவினைவணிகன் ஆய் அலன்; பிறரும் சான்றோர் சென்ற நெறியென

ஆங்குப்பட்டன்று அவன் கைவண்மையே”(புறம்.134)

எனவரும் பாடலால் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாராட்டிப் போற்றியுள்ளார். "இப்பிறப்பிற் செய்ததொன்று மறுபிறப்பிற்கு உதவும் என்று கருதிப் பொருளை விலையாகக் கொடுத்து அதற்கு அறங்கெள்ளும் வணிகன் ஆய் அல்லன்; குணங்களால் நிறைந்தோர் பிறரும் சென்றவழியென்று உலகத்தார் கருத அந்த நற்செய்கையிலே பொருந்தியது அவனது கைவண்மையாகும்” என்பது இப்பாடலின் பொருளாகும்.

நரிவெரூஉத்தலையார் உறுதிப்பொருள்களை உலக மக்களுக்கு அறிவுறுத்துவாக அமைந்தது,

'பல்சான்றீரே பல்சான்றிரே

கயல்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட் பயனில் மூப்பிற் பல்சான்றீரே கணிச்சிக் கூர்ம்படைக் கடுத்திற லெனருவன் பிணிக்குங்காலை இரங்குவின்மாதோ நல்லது செய்தல் ஆற்றி ராயினும் அல்லது செய்தல் ஒம்புமின், அதுதான் எல்லாரும் உவப்பதன்றியும்

நல்லாற்றுப் படுஉம் நெறியுமா துவே" (புறம்.195)

என வரும் புறநானூற்றுப்பாடலாகும். தம் வாழ்நாளில் இளம் பருவத்தே பயனுடைய நல்லறங்களைச் செய்யாது வாழ்நாளை வீணே கழித்து முதுமைப்பருவம் எய்திய மாத்தரை நோக்கி "எத்தகைய அறங்களையும் செய்யாது வாழ்நாளை வீணே கழித்த பயனற்ற முதுமைப் பருவத்தின

ஆசை. சி. சா. வ1, 28