பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ராகிய நீவிர் தமது உயிரைக் கூற்றுவன்கவர்ந்து கொள்ள வரும் இறுதிக்காலத்துப் பெரிதும் வருந்துவீர்கள். இப்பொழுது நல்லறங்களைச் செய்யும் ஆற்றலற்ற நிலையில் நீவிர் இருந்தாலும் பிறவுயிர்க்குத் தீமை செய்தலையேனும் ஒழிப்பீராக. அங்ங்னம் எவ்வுயிர்க்கும் தீமைசெய்யா திருப்பதே யாவராலும் உவந்து புகழப்படுவது மட்டுமன்றி நூம்மை நன்னெறிக்கண் செலுத்தும் அறவழியும் ஆகும்” என அறிவுறுத்துவது பொருண்மைமொழிக்காஞ்சி யென்னுந் துறையிலமைந்த இப்பாடலாகும்.

அறச்செயலாகிய நல்வினையால் இன்பமும் தீவினையால் துன்பமும் ஆகிய நுகர்ச்சி வினைசெய்தார்க்கு உண்டு என்னும் சான்றோர் துணியினை ஏற்றுக்கொள்ளாது உலகிற் செய்யப்படும் நன்றும் தீதும் ஆகிய வினைகளால் எந்தப் பயனும் விளைதல் இல்லையென்னும் இம்மைக் கொள்கையினராய்த் தம்மனம் போனவாறு செய்தொழுகும் தீவினையர்ளராகிய சிற்றினத்தாரோடு சேர்தலாகாது என அறிவுறுத்துவது,

“நல்லதன் நலனும் தீயதன் தீமையும்

இல்லையென்போர்க்கு இனன் ஆகிலியர்” (புறம் 29)

எனவரும் புறநானூற்றுத் தொடராகும். “நல்வினையினது நன்மையும் தீவினையினது தீமையும் இல்லையென்று சொல்லுவோர்க்கு இனமாகாது அவரைவிட்டு நீங்கு வாயாக’ என்பது இத்தொடரின் பொருளாகும்.

வானத்திலுலவும் மேகம் பெருமழையைப் பெய்தமையால் உண்டாகிய வெள்ளப் பெருக்கு மலை முகட்டில் உள்ள கற்களையலைத்துக் கொண்டு போறராக இழியும் நிலையினையொத்தது, உலகினை இயக்கும் பேராற்றலினால் முறைப்படுத்தப்படும் ஊழாகிய நியதி என்பதும், அவ்வாற்றினால் ஈர்த்துச் செல்லப்படும் மிதவை (தெப்பம்) போன்றது மன்னுயிர்த்தொகுதி என்பதும், ஊழின்வயப்பட்ட உயிர்கள் உலகிற் பல்வேறு நாடுகளிலும் பல்வேறினங்களிலும் பிறந்தும் இறந்தும் உழன்று இரு