பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

403


வினைப் பயன்களை நுகர்தலின் அவ்வுயிர்கட்கு யாதும் ஊரே, யாவரும் உறவினரே என்பதும், மக்கள் அடையும் நன்றும் தீதும் ஆகியன பிறரால் தரப்படுவன அல்ல, அவரவர் செய்த வினைப்பயனாகத் தாமே வருவன என்பதும், உலகியலிலே மக்கள் பெறும் உயர்வு தாழ்வுகட்கு அன்னோர் இயற்றிய இருவினைப் பயனாகிய ஊழ் என்னும் முறைமையே காரணமாதலால், நல்வினையால் உயர்ந்த பெருமக்களை வியந்து புகழ்தலையோ அன்றித் தீவினை யால் தாழ்வுற்ற சிறியவர்களை எண்ணி இகழ்தலையோ மெய்யுணர்ந்தோ ராகிய தத்துவ ஞானிகள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதும் ஆகியவுண்மை களைத் தம் அனுபவத்தில் வைத்து உணர்ந்த நிலையில் உலக மக்களுக்கு அறிவுறுத்துவதாக அமைந்தது,

K4

யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலுந் தணிதலும் அவற்றோரன்ன சாதலும் புதுவதன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னாதென்றலும் இலமே, மின்னொடு வானந் தண்டுளி தலைஇ யானாது கல்பொரு திரங்கு மல்லற் பேரியாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉ மென்பது திறவோர் காட்சியிற் றெரிந்தன மாதலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை யிகழ்தல் அதனினுமிலமே (புறம்.192)

எனவரும் கணியன் பூங்குன்றனார் பாட்டாகும்.

இதன்கண், ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது, திறவோர் காட்சியின் தெரிந்தனம் ஆதலின் எனவரும் தொடர் ஏதுமொழியாய் நின்று, “யாதும் ஊரே யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தரவாரா, நோதலும் தணிதலும் அவற்றோரன்ன, சாதலும் புதுவதன்றே" எனவரும் கருத்துக்களை முடித்து நின்றது. இங்கு எடுத்துக்காட்டிய