பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

409


தேகான்மவாதமும், ஐம்பொறிகளே உயிர் என்க்கூறும் இந்திரியான்மவாதமும் மனமுதலிய உட்கருவிகளே உயிர் எனக்கூறும் அந்தக் கரனான்ம வாதமும், நுண்ணுடலே உயிர் எனக்கூறும் விஞ்ஞானான்மவாதமும், உடம்பு, அந்தக்கரணம் முதலிய அனைத்துங்கூடிய திரட்சியே உயிர் என்னும் சமூகான்மவாதமும் பண்டைத் தமிழ்நூல்களில் யாண்டும் இடம்பெறவில்லை. இனி அறிவுடையோர்’ (புறம்.197) எனவும் அறிவுகெட நின்ற நல்கூர்மை (புறம்:265) எனவும் உயிர்கள் அறிவும் அறியாமையும் ஒருங்கு உடையனவாய்ப் பிறர் அறிவிக்கக் கருவிகளால் அறிந்து வருதலின், எக்காலத்தும் திரிபின்றி அறிந்தாங்கு அறிந்து நிற்கும் முழுமுதற்பொருளாம் இறைமைத்தன்மை உயிர்கட்கு இல்லை யென்பது நன்கு விளங்கும். எனவே பிரமப் பொருளே ஆன்மா என வாதிக்கும் பிற்கால விஞ்ஞானான்ம வாதத்திற்குப் பண்டைத் தமிழ் நூல்களிற் சிறிதும் இடமில்லை என்பது நன்கு தெளியப்படும்.

'உடம்பின் வேறாக உயிரென்பது உண்டு’ எனப் பண்டைத்தமிழர் தெளிவாக வுணர்ந்து மேற்கொன் டொழுகிய தத்துவக்கொள்கையானது பிற்காலத்தில் தமிழகத்தில் வந்து புகுந்த பல்வேறு சமய விகற்பங்களால் கலக்குண்ட நிலையில் அக்கலக்கங்களைக் களைந்து நீக்கி உடலின் வேறாக உயிர் என்பது உண்டு என ஏதுக்காட்டி வற்புறுத்துவது,

“உளதில தென்றலின் எனதுடல் என்றலின்

ஐம்புலனொடுக்கம் அறிதலின், கண்படின்

உண்டிவினையின்மையின் உணர்த்தவுணர்தலின்

மாயாவியந்திர தனுவினுள் ஆன்மா”

(சிவஞானபோதம்,சூத். 3)

எனவரும் சிவஞானபோத மூன்றாஞ் சூத்திரமாகும்.

பத்துப்பாட்டு எட்டுத்தொகையாகிய சங்க விலக்கியங்களிலிருந்து இதுகாறும் எடுத்துக்காட்டிய

குறிப்புக்களால் சங்க காலத் தமிழ்மக்கள் வாழ்வியலிற் காணப்பட்ட திருமால் முருகன் முதலிய தெய்வ வழிபாடு