பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

33


செல்லப்பட்டது. இஸ்ரவேலரது ‘பால்' கடவுள் சிவலிங்கமே. விவிலியத்திற் கூறப்படும் சியன்' என்னும் தெய்வம் சிந்து நதிமக்கள் வழிபட்ட சிவனேயாவர்.

இந்திய மக்களது சிவலிங்க வழிபாடு உலகிற் பல நாடுகளிலும் பரவியிருந்தமைக்குரிய சான்றுகள் ஆங்காங்கே கிடைக்கின்றன. சீனா, சப்பான், இந்துக் கடலின் தீவுகள், பசிபிக் கடலின் தீவுகள் முதலிய இடங்களில் சிவலிங்க வழிபாடு இன்னும் முற்றிலும் மறைந்துவிடவில்லை. ஆப்பிரிக்க அமெரிக்க மக்களிடையிலேயும் இவ்வழிபாடு ஒரு காலத்திற் பரவியிருந்தது. அசீரிய, யூதேய, சிரிய, சின்ன ஆசிய பாபிலோனிய மக்களிடையிலும் இலிங்க வழிபாடு பரவியிருந்தமை விவிலியமறையால் அறியப்படுகின்றது. சில நாட் களுக்கு முன் பாபிலோன் நாட்டிற் சிவலிங்கங்கள் பல அகழ்ந்தெடுக்கப்பெற்றன. எகிப்தில் சிவலிங்கங்களுடன் புலிகளும் பாம்புகளும் வனங்கப்பட்டன. எகிப்திய சமாதிச் சுவர்களில் சிவலிங்கங்கள் இணைக்கப் பெற்றிருக்கின்றன. பழைய ஐரோப்பாவில் இலிங்க வணக்கம் எங்கும் பரவியிருந்தது. இவ்வனக்கத்தை ஒழிப்பதில் கிறித்தவக் குருமார் ஊக்கங் கொண்டிருந்தனர். கிரீசிலே விசா என்னுமிடத்தில் சிவலிங்கம் தொடர்பான கிரியைகள் இன்றும் நடைபெறுகின்றன. அயர்லாந்திற் கிறித்தவ ஆலயங்கள் பலவற்றுட் சிவலிங்கங்கள் காணப்படுகின்றன. அவை சீலநாகிக் என வழங்குகின்றன. இப்பெயர் சிவலிங்கம் என்பதன் திரிபாகலாம். தொல்பொருள் ஆராய்ச்சியாளர் இங்கிலாந்திலும் ஸ்காட்லாந்திலும் சிவலிங்கங்கள் பலவற்றைக் கண்டுபிடித்தனர். இவை காணப்பட்ட இடங்கள் உரோமர் வாழ்ந்த இடங்களாகும். உரோமர் இலிங்க வழிபாட்டை இங்கிலாந்திற் பரப்பியிருத்தல் கூடும்.

லிதுவேனியமக்கள் 14ஆம் நூற்றாண்டுவரையில் இலிங்க வணக்கத்தை மேற்கொண்டிருந்தனர். பின்பு கிறித்தவ மதத்தைத் தழுவினர். திபேத்து, பூட்டான் என்னும் இடங்களில் சிவலிங்க வணக்கம் காணப்படுகிறது. நேபாளம் அசோகர்க்கு நெடுங்காலந்தொட்டே சிவலிங்க வழிபாட்டுக்குச் சிறப்புரிமையுடைய நாடாகத் திகழ்ந்து