பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வெகுளி என்னும் குற்றங்களையும் இன்னாச்சொல் முதலிய மொழிக்குற்றங்களையும் அகற்றிய நிலையில் நிகழ்வதே மெய்ம்மையான அறம் எனப்படும். நல்லறங்கட்கெல்லாம் நிலைக்களமாகத் திகழ்பவன் அறத்தின் கடலாகவும் அருளாளனாகவும் விளங்கும் இறைவன் ஒருவனே. அம்முதல்வனது திருவருள்நெறியாகிய ஒழுக்க நெறியின் வழுவாது ஒழுகுவோரே அறவோர் எனப்போற்றப்பெறும் சிறப்புடையோராவார் என்பன அறத்தின் தொடர்பாகத் திருவள்ளுவர் அறிவுறுத்திய கருத்துக்களாகும். அறத்திற்குப் பற்றுக்கோடாகிய இறைவனது அருள்வழி யடங்கிநின்று மாசற்றமனமும் தீமையில்லாத சொல்லும் உடையராய்ச் செய்யும் நற்செயல்களே அறமெனப்படும் என்பது திருவள்ளுவர் அறிவுறுத்திய அறத்தின் இலக்கணமாகும்.

அறத்தைப்பற்றிய நல்லுணர்வு, மக்களினத்தாரில் தனியொருவடைய கல்வி அறிவு செல்வம் செயல்திறன் முதலியவற்றால் மட்டும் உலகியல் வாழ்வில் நிலை பெறுதற்குரிய சுருங்கிய எல்லையுட்பட்டு அடங்குவதன்று; மக்கள் ஒவ்வொருவரும் தாம்தாம் வழிபட்டுப்போற்றும் இறைவனது அருளால் ஒன்றுகூடிப் பெறுதற்குரிய விரிந்த பரப்பினையுடையது அறமாகும். சுருங்கக்கூறின் உலக முதல்வனாகிய இறைவனது பேரருளும் அவ்வருளால் மக்கள் மனத்தகத்தே ஊற்றெடுத்துப் பெருகும் பேரன்பும் ஒருங்கு இணைந்த சமுதாய அமைப்பிற் கருக்கொண்டு நிலை பெறுவதே அறம் எனக்கூறுதல் மிகவும் பொருத்த முடையதாகும்.

ஆசிரியர் திருவள்ளுவனார், 'அறமுதலாகியமும் முதற்பொருள் எனத் தொல்காப்பியனார் குறித்தவண்ணம் மூன்றன்பகுதியாக (முப்பால்களாக)த் தம் நூலை இயற்றி யுள்ளார். தொல்காப்பியனார் வாழ்ந்த காலத்திற்கும் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கும் பிறப்பட்ட காலத்தில் வாழ்ந்த பெருமக்கள் அறமுதலாக முன்னோர் எண்ணிய உறுதிப்பொருள் மூன்றனுள் இன்பத்தினைச் சிற்றின்பம் எனவும், பேரின்பம் எனவும் இரண்டாகப் பகுத்தனர். இப்பகுப்பு சிற்றின்பம் மற்றின்பம் (பேரின்பம்) எனத்