பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

415


திருவள்ளுவர் பகுத்த முறையினை அடியொற்றியதாகும். சிற்றின்பம் என்றது ஐம்புலன்களால் இவ்வுலகில் நுகர்தற்குரிய இம்மையின்பத்தினை மற்றின்பம் (பேரின்பம்) என்றது பிறப்பற்ற நிலையிற் பெறுவதற்குரிய வீடுபேற்றினை. இவற்றுள் முன்னதனை இன்பம் என்றும் பின்னதனை வீடு என்றும் பெயரிட்டு அறம் பொருள் இன்பம் வீடு என உறுதிப்பொருள்கள் நான் கெனக் கொண்டனர் பின் வந்தோர். இங்ங்னம் பிற்காலத்தில் நான்காவதாகப் பிரித்துரைக்கப்படும் பேரின்பமாகிய வீடுபேறு தொல்காப்பியனார் முதலிய முன்னைத் தமிழ்ச் சான்றோரால் மூன்றவதாகச் சுட்டப்பட்ட இன்பத்துள்ளேயே அடங்கும் என்பது,

“சிற்றின்பம் வேண்டி அறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டுபவர்” (திருக். 175)

எனவும்,

"இன்பம் இடையறாது, ஈண்டும் அவாவென்னும்

துன்பத்துட்டுன்பங்கெடின்” (திருக். 369)

எனவும் வரும் திருவள்ளுவர் வாய்மொழிகளால் இனிது விளங்கும். என்வே வையத்து வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை நெறியினை அறிவுறுத்த எண்ணிய திருவள்ளுவர் தாம்கூற எடுத்துக்கொண்ட அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப்பொருள்களை அறிவுறுத்தும் முப்பாலிலே பிற்காலத்தில் நான்காவதாகப் பகுத்துரைக்கப்படும் வீடுபேற்றின்பமும் அடங்கவே திருக்குறளை இயற்றியுள்ளார் என்பது ஆன்றோர் துணியாகும். இது பற்றியே முப்பாலில் நாற்பால் மொழிந்தவர் (திருவள்ளுவமாலை 19) எனவும், “அறம் பொருள் இன்பம் வீடென்னும் இந்நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவு”(திருவள்ளுவமாலை 8) எனவும் திருவள்ளுவரைப் புலவர் பெருமக்கள் பலரும் உளமுவந்து போற்றியுள்ளார்கள். எனவே திருக்குறளின் அறம் பொருள் இன்பம் என்னும் மும்முதற் பொருள்களே விரித்துரைக்கப் படினும் அம்முப்ப்ொருள்களின் வாயிலாக முடிந்த பேரின்ப நிலையாகிய வீடுபேற்றியல்பும் தெரிவிக்கப்பெற்றுள்ளமை