பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


சித்தாந்த மெய்ந்நெறிப்பயனை இயற்றியுள்ளமை இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும். மெய்கண்டார் அருளிய சிவசித்தாந்தத் தனிமுதல் நூலாகிய சிவஞானபோதத்தின் சார்புநூலாக உமாபதி சிவாசாரியாரால் இயற்றப்பெற்றது சிவப்பிரகாசம் என்பதாகும். அந்நூலில் விரித்துரைக்கப் பெறும் சைவ சித்தாந்தவுண்மைகளைக் கற்றுனர விரும்புவோர் அப்பொருளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் முதற்கண் புரிந்து கொள்ளும் முறையில் உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பெற்றது திருவருட்பயன் என்பதாகும். இறைவனது திருவருள் ஞானம் பெற்ற திருமுறையாசிரியர்களால் அருளிச் செய்யப்பெற்ற மெய்ப் பொருளியல்பாகிய நற்பொருட்பயன்களைச் சிறப்புமுறையில் விளக்க எழுந்த திருவருட்பயன் என்னும் இந்நூலானது உலகு உயிர் கடவுள் என்னும் முப்பொருளுண்மையினை வற்புறுத்தும் பொதுநிலையில் உலகப் பொதுமறையாகிய திருக்குறளின் யாப்பினையும் சொற்பொருளமைப்பினையும் அவ்வாறே அடியொற்றிச் செல்கின்றது. இவ்வுண்மை,

"எழிலிரைந்தும் வழுவறப்புணர்த்தித்

தெள்ளுசீர்ப்புலமை வள்ளுவன் தனக்கோர் நற்றுணையுடைத்தெனக்கற்றவர் களிப்ப அருட்பயனென்னா அதற்கொருநாமந் தெருட்படப்புனைந்து செந்தமிழ்யாப்பிற் குறளடி வெள்ளை ஒரு நூறியம்பினன்”

எனவரும் நிரம்பவழகிய தேசிகர் உரைப்பாயிரத்தால் இனிது புலனாதல் காணலாம்.

“யாதானும் நாடாமல் ஊராமல்’ (திருக். 397) என்றபடி உலக மக்கள் அனைவரும் ஒருநாட்டார் ஒரூரார் ஒரு குடும்பத்தார் என்னும் ஒருமையுணர்வுடன் அன்பினால் அளவளாவி இனிது வாழ்தல் வேண்டும் என்னும் உயர்ந்த ஒழுகலாற்றினை வற்புறுத்தும் முறையில் வாழ்வியல் நூலாகத் திகழ்வது திருக்குறள். உலகத்தில் எல்லா மக்களும் இன்பமாக வாழ்தல் வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோளையுடைய திருவள்ளுவர், உலகில் மன்னுயிர்களின் வாழ்வுக்கு அடிப் படையாகவுள்ள பொருள்களின் தன்மைகுறித்துத் தம்முள்