பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


காணப்படும் உலகம் மெய் என்பாரும் வெறும் பொய்த் தோற்றமே என்பாரும், உயிர்கட்கு மறுபிறப்பும் இருவினைப் பயன்களும் உள என்பாரும் இல்லை என்பாரும் எனத் தம்முள் முரண்பட்ட கொள்கைகளையுடையராதலை அவரவர் சமய நூல்களால் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு பலசமயத்தாரும் தம்முள் மாறுகொண்டு கூறும் பல்வேறு முடிவுகளுக்கும் இடந்தரும் நிலையில் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியிருத்தல் இயலாது. இங்ங்னம் பலதிறத்தாலும் முரண்பட்ட கொள்கையினவாகிய சமயங்கள் பலவற்றுள் ஏதேனும் ஒரு சமயத்தினைச் சார்பாகக் கொண்டு தமது நூலை இயற்றாமல் உலகமக்கள் அனைவரது வாழ்க்கையிலும் காணப்படும் இன்பத் துன்பங்களாகிய நுகர்ச்சிகளையும் அவற்றுக்குக் காரணமாய் மக்கள் செய்யும் நல்வினை தீவினைகளையும் அடிப்படை யாய்க் கொண்டு நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இவையெனப் பகுத்துணர்ந்து தீவினையைத் தவிர்த்து நல்லனவே செய்தொழுகுதலாகிய அறநெறியினை உலக மக்கள் மேற்கொள்ளும்படி அறநூலாகிய திருக்குறளைத் திருவள்ளுவர் இயற்றியுள்ளார் என்பதும், நல்லதன் நலனும் தீயதன் தீமையும் ஆகிய இருவினைப்பயனும், அவை காரணமாக வரும் மறுபிறப்பும் இல்லையெனச் சாதிக்கும் இன்மைக் கொள்கைக்குத் திருக்குறளிற் சிறிதும் இடமில்லை யென்பதும் இந்நூலைக் கற்போர் உளங்கொளத்தக்கனவாம்.

திருவள்ளுவர் திருக்குறளிலே ஐயத்திற்கிடனின்றி அறிவுறுத்திய கருத்துக்களிற் பெரும்பாலன அவர்க்குமுன் நெடுங்காலமாகத் தமிழகத்தே வாழ்ந்த சான்றோர்கள் தமது வாழ்க்கை நுகர்ச்சியிற் கண்டு அறிவுறுத்திய தொன்மை யுடையனவே. தமிழ்நாட்டில் இடைக்காலத்திற் குடியேறிய அயலவர் கூட்டுறவால் பரவிய புதிய கொள்கைகளை ‘எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பதறிவுட் திருக். 423) எனத்தெளிந்த சிந்தனையுடன் நடுவுநிலையில் நின்று ஆராய்ந்து அவற்றுள் நல்லனவற்றை உடன்பட்டு ஏற்றுக்கொண்டும், இந்நாட்டில் நெடுங்காலம் நிலைத்துள்ள பழைமையுடையனவாயினும் தீமையுடையனவற்றைக் கண்டித்து அறவே விலக்கியும்