பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


முழுமுதல்வனாக விளங்கி உலக வுயிர்கள் யாவும் அவனது ஆணைக்குள் அடங்கி வினைக்கீடாக உலக உடல் கருவி நுகர்வினைப் பெற்றுத் திரிபுடையனவாய் நிலவா நின்றன என்பதாம். எழுத்துக்கள் எல்லாவற்றினும் நிறைந்து அவற்றிற்கெல்லாம் முதலாய் நிற்கும் பொதுவியல்புபற்றி அகரத்தை இறைவனுக்கு உவமையாகக் கூறினும் அப் பரம்பொருள் அறிவேயுருவாய் உலகப்பொருளனைத்தும் தனக்கு உடைமையாகக் கொண்ட தன்னேரில்லாத் தலைவனும் ஆதலால், உண்மையாக ஆராய்ந்து பார்க்குங்கால் அம்முதல்வன் தன் உடைமைப் பொருள்க ளாகிய பசுபாசங்கள் ஒன்றினோடும் உவமிக்கப்படுபவ னல்லன் என்பதே திருவள்ளுவர் கருத்தென்பது அறிவுறுத்துவார், 'அறிவாகி எங்கும்நிகிரிலிறை நிற்கும் நிறைந்து என்றார். அகரவுயிர்போல் 'அகர முதல’ என்னும் முதற் குறளையும் அறிவாகி என்பது வாலறிவன் என்னும் இரண்டாம் குறளின் தொடரையும், 'நிகரிலிறை என்பது 'தனக்குவமையில்லாதான்’ (திருக். 7) என்னும் தொடரையும் ‘எங்கும் நிறைந்து நிற்கும்’ என்பது, ‘இறைவன் (திருக் 5, 10) பெயர்க் காரணத்தையும் விளக்கும் முறையில் அமைந்திருத்தல் ஒப்புநோக்கியுணரத்தகுவதாகும்.

எழுத்துக்கள் உயிர், மெய் என இருதிறத்தனவாய் அகரமுதல ஆதல் போன்று, உலகமும் உணர்வுடைய வுயிர்கள் உணர்வில்லாத உயிரல் பொருள்கள் என இரு திறத்தினதாய் ஆதிபகவனை முதலாகவுடையது என்று அறிவுறுத்துவது திருக்குறளின் முதற்குறளாகும். உயிரெழுத்து ஆன்மாவுக்கும் மெய்யெழுத்து தத்துவப் பிரபஞ்சத்திற்கும் அகரம் ஆதிபகவானாகிய இறைவனுக்கும் உவமை. ஆதிபகவன் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர் பரிமேலழகர். அவர் கருத்துப்படி இத்தொடர் 'ஆதியாய பகவன் என விரியும்; முதற்கடவுள் என்பது இதன்பொருளாகும். இனி, ஆதிபகவன் என்னும் இத்தொடர்க்கு ஆதியொடு கூடியபகவன்’ எனப் பொருள் கொள்வர் ஆளுடையபிள்ளையார். இங்கு ஆதி என்றது, எப்பொருள்களையும்தோற்றுவிக்கும் அன்னையாகிய சக்தியை. உலகத்தோற்றத்திற்குக் காரணமானவள் என்ற