பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

429


முதற்றேயுலகு என்னும் திருக்குறள் தொடருக்குரிய விளக்கவுரையாக அமைந்துள்ளது.

உலகமெலாம் ஒடுங்கிய ஊழிக்காலத்தே, "பெண்ணுரு ஒரு திறனாகின்று அவ்வுருத் தன்னுளடக்கிக் கரக்கினுங் கரக்கும்’ (புறநானூறு, கடவுள் வாழ்த்து) என்றபடி அம்மையின் வடிவினைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொண்டு ஒருவனாக நின்ற இறைவன், உலகத்தை மீளத்தோற்றுவிக்கும் படைப்புக் காலத்தே உயிர்களின் வினைப்பயன்களை நுகர்வித்துக் கழித்தற்பொருட்டும், உயிர்களைத் தோற்றமில் காலமாகப் பிளிைத்துள்ள அக விருளாகிய ஆணவமலம் கழலும் பக்குவத்தை யடைதற் பொருட்டும் தன்னுள் அடக்கிய சத்தியினை மீண்டும் தன்னுருவில் வெளிப்படச்செய்து அம்மையப்பாகவிருந்து ஒடுங்கிக்கிடந்த மன்னுயிர்களை உலகு.உடல் கருவி நுகர் பொருள்களுடன் மீளவும் தோற்றுவித்தருள்வன் என்பார், 'அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக’ என்றார். இதனால் எல்லாவற்றையும் ஒடுக்குதற் கருத்தாவாகிய இறைவனே மீளவும் படைத்தற்குரியவன் என்பதனையும் புலப்படுத்தியவாறு. பல்லுயிர்க்கும் தாயுந் தந்தையுமாகிய இறைவர் மன்னுயிர்த்தொகுதிகளின் இயல்புக்குத் தக்கவாறு தன்மைக் கண்ணும் முன்னிலைக் கண்ணும் படர்க்கைக் கண்ணும் எழுந்தருளிவந்து நற்பொருளையறிவுறுத்தி ஆட்கொண்டு அருள்புரிவார் என்பார் அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர்’ என்றார். இங்ங்ணம் உயிர்கட்கு அருள்புரிதல் வேண்டி இவ்வுலகத்துத் திருமேனி கொண்டு எளிவந்து அருள்புரிவாராயினும் நிலமுதல் நாதமுடிவாக வுள்ள தத்துவங்களைக் கடந்து அப்பாற்பட்டு விளங்கும் அவ்விறைவரது உண்மையியல்பு யாவராலும் உணரவியலாத அருமையுடையது என்பார் எல்லாவுலகுக்கும் அப்புறத்தார் என்றார். இவ்வாறு அண்டங்கடந்து அப்புறத்தாராயினும் தம்மின் வேறல்லாத அருள் என்னும் சத்தியாலே எல்லா வுலகங்களும் தொழிற்பட்டு இயங்கும் வண்ணம் உலகுயிர் களிற் பிரிவறக் கூடியிருந்தே அவற்றின் தன்மை தம்மைப் பற்றாதவாறு அவற்றுள் சிறிதும் தோய்வின்றி நிலைத் துள்ளார் என்பார், இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர்