பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


என்பது எண்ணிறந்த உயிர்கள் தோறும் கூடிநின்று அவற்றின் அறிவை மறைத்தும் தான் ஒன்றேயாயிருப்பது உயிர்களது வினை நுகர்ச்சியாகிய பக்குவம் இன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப அவரவர் இடங்களிலே அறிவைமறைத்து நின்று அந்தந்த ஆன்ம போதங்களின் மீட்சியிலே நீங்குவதாயிருக்கிறதன் செயல் வகையாகிய எண்ணிறந்த ஆற்றல்களையுடையது, செறிந்த இருளும் வெளியென்று சொல்லுமளவுக்கு மொய்த்து இருண்டு உயிர்களின் அறிவைப்பிணித்து நின்று மறைத்தலைச் செய்வது செம்போடு கூடிய களிம்பானது அந்தச் செம்பு உள்ளபொழுதே அதனை உள்ளும்புறம்பும் கலந்து அதன்வெட்டு வாய்தோறும் கூடிநின்றாற்போல உயிரறிவோடும் கலந்து மறைந்து நிற்கிற அழியாத அநாதிமலமாய் உயிர்களின் விழைவு அறிவு செயல் என்னும் மூவகை யாற்றலும் சிறிதும் நிகழாதபடி மறைத்து நிற்பது எனச் சைவசித்தாந்த மெய்ந்நூல்கள் ஆணவ மலத்தின் இயல்பினை விரித்துரைக்கின்றன. உயிர்களின் அகக்குற்ற மாகிய இவ்வாணவமலம் திருக்குறளிலும் சைவத்திருமுறை களிலும் 'இருள்” எனவே குறிக்கப்பெற்றுள்ளது. இந் நுட்பத்தினைத் தெளியவுனர்ந்த உமாபதி சிவாசாரியார் திருக்குறளை அடியொற்றித் தாம் இயற்றிய திருவருட்பயன் என்னும் சைவசித்தாந்த நூலில் இருள் என்பதனை ஆணவமலம் என்ற பொருளில் ஆள்கின்றார். ஆணவமலத் தின் இலக்கணத்தினை விரித்துக்கூறும் அதிகாரத்திற்கு 'இருள்மலநிலை என அவர் பெயரிட்டமைக்கு 'இருள்சேர் இருவினையும் சேரா எனவரும் தொடரில் திருவள்ளுவர் 'இருள்” எனக்குறித்தது ஆணவமலம் எனத் தெளிய வுணர்ந்தமையே காரணமாகும்.

"இருள் நீங்கியின்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சியவர்க்கு” (திருக். 351)

எனவரும் குறளில் மயக்கத்தினை மருள்' என்ற சொல்லாற் குறித்த திருவள்ளுவர், மருளின் வேறாக இருள் என்றதோர் பொருளுண்மையினையும் உடன்குறிப்பிடுகின்றார். எனவே 'இருள்சேர் இருவினை எனவரும் தொடரிலுள்ள 'இருள்” என்பதற்குப் பரிமேலழகர் கூறுமாறு மயக்கம் எனக்