பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

437


மறைப்பினாலேயே உயிர்கள் தாமேயறியுந்தன்மையையிழந்து அல்லற் படுகின்றன என்பதும், பொருள் சேர் புகழ்' என்ற தொடரிற் பொருள்' என்றது, இறைவனது திருவருள் ஞானத்தையே என்பதும் இறைவனது புகழ் அவன் அருள் புரியும் மெய்ஞ்ஞானத்தின் துணை கொண்டே உணர்தற் குரியதாதலின் அதனைத் திருவள்ளுவர் பொருள்சேர் புகழ்' என அடைகொடுத்தோதினார் என்பதும் நன்கு புலனாகும்.

ஆணவம் எனப்படும் அகவிருள் நீங்க நோக்கும் ஞான நாட்டம் உயிர்கட்கு இயல்பாக அமைந்ததன்று என்பதும், அநாதிமறைத்துள்ள அவ்விருளைநீக்கி உயிர்கட்கு மெய்யுணர்வும் பேரின்பமும் அளிக்கவல்ல பேரருளும் முற்றுணர்வும் முடிவிலாற்றலும் ஒருங்குடைய முதல்வன் இறைவன் ஒருவனே என்பதும் சிவநெறிச்செல்வர்கள் துணிபாகும். இந்நுட்பம்,

"இருளறுத்துநின்று, ஈசன் என்பார்க்கெல்லாம்

அருள்கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே (5.31.8)

எனவும்,

"இருளாயவுள்ளத்தின் இருளை நீக்கி

இடர்பாவங் கெடுத்து”

எனவும் அப்பர் அருள்மொழிகளால் இனிது புலனாதல் கானலாம்.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறி களின் வழியாக நிகழும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் ஐம்புல நுகர்ச்சிகளிலும் விருப்புற்றுத் தம்முனர் வின்றித் தாழும் தன்மை மக்களது மனத்தியல்பாகும். ஐம்பொறிகளையும் அடக்கும் வன்மையின்றி ஐயுணர்வுகளின் வழியே செல்லும் மக்களது மனத்தினைத் திருத்தி அவ்வைந்தினையும் அடக்கியாளவல்ல ஆற்றலை வழங்குதல் இறைவனது அருளியல்பாகும். நல்லொழுக்க நெறி நிற்பார்க்கு இன்றியமையாத புலனடக்கத்தையும் பொய்மையே பெருக்கும் பாசப்பிணிப்பின் நீக்கத்தையும் அளித்தற்பொருட்டு எல்லாம்வல்ல இறைவன் உயிர்க்