பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


குயிராய் உள்நின்றுணர்த்திய மெய்ந்நெறியே பொய்த்ர் ஒழுக்க நெறியாகும். உயிர்க்குயிராய் உள்நின்றுணர்த்தும் இறைவனது திருவருட்குறிப்புணர்ந்து அம்முதல்வன் அறிவுறுத்திய மெய்ம்மையான ஒழுக்கநெறியில் நிற்போர் பிறப்பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் நெடிது வாழ்வார் என்பர் பெரியோர். இவ்வுண்மை,

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடு வாழ்வார்” (திருக். 5)

எனவரும் திருவள்ளுவர் வாய்மொழியால் இனிது புலனாம். ஈண்டு இறைவனைப் பொறிவாயில் ஐந்தவித்தான் என்றது, இறைவன் தனக்கு ஐம்பொறிகளுடைய யாக்கை யமைந்திருந்து அவற்றின் வாயிலாக நிகழும் அவாக்கள் ஐந்தினையும் தன் ஞானத்தால் அடக்கி வென்றான் என்ற கருத்திற் கூறப்பட்டதன்று. இறைவன் ஏனைய உயிர்களைப் போன்று மாயையின் சம்பந்தமுடைய உடம்பினையுடைய பாசத்துள் அகப்பட்டவன் அல்லன் என்பது அவன் துய மெய்யுணர்வினையே தன் மேனியாகக் கொண்டவன் என்பதும் வாலறிவன்’ என்ற தொடரால் உணர்த்தப் பட்டன. ஐம்புல அவாக்களால் உந்தப்பட்டு எத்தகைய பொருள்களையும் விரும்புதலும் வெறுத்தலும் இறைவனுக்கு இல்லை என்பது வேண்டுதல் வேண்டாமையிலான்’ என்ற தொடரால் முன்னரே வலியுறுத்தப்பட்டது. அருளே திருமேனியாகவுடைய இறைவனுக்கு ஐம்பொறிகள் இல்லை. எனவே ஐம்பொறிவாயிலாக நிகழும் ஐயுணர்வு இறைவனுக்கு இல்லாமையும் அவை இல்லையாகவே அவற்றையடக்குதல் வேண்டாமையும் நன்கு விளங்கும். விருப்பு வெறுப்புடைய உயிர்கள் ஐயுணர்வுகளால் மயங்கி அவற்றை யடக்க மாட்டாது அல்லற்படுத் துன்பநிலையிலே அருளாளனாகிய இறைவன் பொறிவாயில் ஐந்தினையும் அடக்கியாளும் மெய்ம்மையான ஒழுக்கநெறியினை அகத்தே அவர்தம் உள்ளத்திலிருந்து உணர்த்தியும் புறத்தே குருவாக எழுந்தருளி வந்து அறிவுறுத்தியும் நலஞ்செய்கிறான் என்பதும், இயல்பாகவே பாசங்களின் நீங்கிய இறைவ்னாலன்றி ஏனைப் புலனுணர்விலகப்பட்ட மாந்தர்களால் எடுத்துரைக்கப்படும் அவர்கள் சூழ்நிலைக்கேற்பக் குறுகிய வரம்புட்பட்