பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

439


டமைவனவன்றி.உலகவுயிர்கள் எல்லாவற்றுக்கும் மனநிறைவு தரும் மெய்ம்மை வாய்ந்த ஒழுக்கநெறியாக அமைதல் இயலாதென்பதும் இத்திருக்குறளால் அறிவுறுத்தப்படும் அரிய வுண்மைகளாகும். ஆகவே "பொறிவாயில் ஐந்தவித்தான்’ என்னும் திருக்குறள் தொடர், 'தன்பாலுள்ள ஐம்பொறிகளையும் அடக்கினான்’ என்ற பொருளில் வழங்கப்பெறவில்லையென்பதும் "தன்னை அன்பினால் வழிபடும் அன்பர்கட்கு அன்னோர் தம் ஐம்புலன்களையும் அடக்கி வெல்லும் நல்வழியினை அறிவுறுத்தினான்’ என்ற பொருளிலேயே தெய்வப்புலவரால் ஆளப்பெற்றதென்பதும்,

经线

வறிதே நிலையாத இம்மண்ணுலகில் நானாக வகுத்தனை நான்நிலையேன் பொறிவாயில் இவ்வைந்தினையும் அவியப் பொருது உன்னடியேபுகும் சூழல் சொல்லே" (7.3.3)

எனவரும் நம்பியாரூரர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும். 'பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் என்ற தொடரைப் பொய்யிலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார்’ (2.42.1) என ஆளுடைய பிள்ளையார் விரித்துப்பொருள் அருளிச்செய்துள்ளமையும் இங்கு நினைக்கத்தகுவதாகும்

தன்னின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனி முதல்வனாகத் திகழும் இறைவனுடைய திருவடிகளை நினைந்து வழிபடும் இயல்புடையவர்களே, தம்மனத்தின்கண் நிகழுந் துன்பங்களாய கவலைகளை மாற்றவல்லவர் எனவும், இறைவன் திருவடியினை நினையாதார் காமவெகுளி மயக்கங்களாகிய மனமாசுகளை நீக்கமாட்டமையால் அவற்றால் வரும் துன்பங்களுள் அழுந்திக் கவலையுறுவர் எனவும் அறிவுறுத்துவது,

“தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது.” (திருக். 7)

என வரும் திருக்குறளாகும். எவ்வகையாலும் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி உயர்வறவுயர்ந்தோன் இறைவன் ஒருவனேயாதலின் அம்முதல்வனைத் தனக்குவமை