பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

441


எனவரும் அப்பரருள் மொழியால் அறியப்படும். “கண்ணுதல் தன்நிறைவதனிற் கலந்தார்க்குப் பண்டை ஏகதேசவுணர்வு தூர்ந்து போதலின் ஏகதேசவுடம்பில் நிகழும் இன்பத் துன்பத்திற்கு உற்பாத முதலியவற்றை நோக்கி வரக் கடவதோர் கவலையின்மையின், ‘எங்கெழிலென் ஞாயிறெமக்கு என்று குறைவின்றி நிற்பாராயினாரென்பது, “தனக்குவமையில்லாதான் தாள்சேர்ந்தார்க்கல்லான், மனக் கவலை மாற்றலரிது’ என எதிர்மறை முகத்தாற் கூறியதும் இதுபற்றியென்க” (சித்தியார். சுபக். சூ. 8. 31ஆம் செய்யுளுரை) எனச் சிவஞானமுனிவர் இத்திருக்குறளை மேற்கோளாகக் காட்டி விளக்கிய திறம் இங்கு மனங்கொளத் தகுவதாகும்.

அறத்தின் கடலாகவும் அருளேயுருவினனாகவும் திகழ்வோன் இறைவன். அம்முதல்வன் திருவடியாகிய புனையைப் பற்றினார்க்கல்லது பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடத்தல் இயலாது என அறிவுறுத்துவது,

"அறவாழியந்தனன் தாள் சேர்ந்தார்க் கல்லாற்

பிறவாழி நீந்தல் அரிது” (திருக். கட வா. 8)

எனவரும் திருக்குறளாகும். நல்லறங்கள் எல்லாவற்றுக்கும் நிலைக்களமாய் நின்று, அவ்வறங்களை நிகழ்த்துதற்குரிய பேரருளாளனாகத் திகழ்வோன் இறைவன் ஒருவனே யாதலின் அம் முதல்வனை "அறவாழியந்தனன்’ எனக் குறித்தார் திருவள்ளுவர். அறக்கடலாகிய அருளாளன் என்பது இத்தொடரின் பொருளாகும். அறங்கள் எல்லாவற்றுக்கும் அருளே மூலம் (தயாமூலதனம்) ஆதலின் அறமும் அருளும் ஆகிய இவ்விரண்டின் திருவுருவாகவும் இறைவன் விளங்குகின்றான் என்பார் அறவாழி என்னாது 'அறவாழியந்தனன் என்றார் தெய்வப்புலவர். கடலே யனைய அறமும் அழகிய தண்ணளியாகிய பேரருளும் ஒருவன் என்னும் ஒருவனாகிய இறைவனிடத்தன்றி ஏனையுயிர்த் தொகுதிகளிடத்தே முழுவதும் நிலைபெறுத லாகிய என்பது புலப்பட அறவாழியந்தனன்’ என ஒருமையாற் கூறினார். இறைவனை அறவாழியந்தனன் என