பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஒருவனாகவும் இறைவனருள் பெற்ற அறவோர்களாகிய நீத்தாரை அந்தனர் என்போர் அறவோர் (திருக்.) எனப் பலராகவும் குறித்துள்ளமை இறைவன் ஒருவன் உயிர்கள் பல என்னும் தமிழ் முன்னோரது தத்துவக்கொள்கையினைப் புலப்படுத்துதல் காணலாம்.

எண்குணங்களையுடையவன் இறைவன் எனவும் எண்குணத்தானாகிய அம்முதல்வனுடைய திருவடிகளை வனங்காத தலைகள் தமக்குரிய புலன்களையுனரும் ஆற்றலில்லாத பொறிகளைப் போலப் பயன்படாதனவே எனவும் அறிவுறுத்துவது,

“கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத்தலை” (திருக் கட. வா. 9)

எனவரும் திருக்குறளாகும்.

“எண்குணங்களாவன தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல் இயற்கையுணர்வினனாதல், முற்றுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. அணிமாவை முதலாகவுடையன எனவும் கடையிலா அறிவை முதலாக வுடையன எனவும் உரைப்பாருமுளர்” எனப் பரிமேலழகர் தரும் விளக்கம், சிவாகமத்துக் கூறப்படும் எண்குணங்களே இறைவனுக்குச் சிறப்புரிமையுடைய குணங்களாம் என்பதனை நன்கு புலப்படுத்துவதாகும். அன்றியும் அனிமா முதலியன எட்டும் யோகிகளால் முயன்று பெறுதற்குரிய எண்வகைச் சித்திகள் எனப்படுவனவல்லாது கடவுளுக்கே யுரிய சிறப்புடைக் குணங்களாகாமையும் ஆருகதர் கூறும் கடையிலா அறிவு (அநந்த ஞானம்) முதலிய எட்டினுள் அநந்தஞானம்,அநந்த வீரியம், அநந்ததரிசனம், அநந்தசுகம் என்னும் நான்குமே குனங்களாகக் கொள்ளத்தக்கன. நாமமின்மை, கோத்திரமின்மை ஆயுளின்மை அழியாவியல்பு என்னும் நான்கும் உயிர்க் குணங்களின் மறுதலை யெனப்படுவனவன்றி ஒரு பொருளின் பண்பெனப் படாமையானும் சிவபெருமானுக்குரிய சிறப்புடைப்