பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


'வான்சிறப்பு’ என்னும் இரண்டாம் அதிகாரமாகும். உலகத்துப் பயிர்கள் வளரப்பொழியும் மழையானது பல்லுயிர்க்கும் அருள் சுரக்கும் இறைவனது திருவருள்

வண்ணமாகத் திகழும் சிறப்புடையதாகும். இவ் வுண்மையினை மன்னானவன் உலகிற்கொரு மழை யானவன்’ (1.15.6) எனவும், சொரிவிப்பார் மழை (5.15.3)

எனவும், 'காக்கின்ற மழையாய்ப் பொழிவானை’ (7.59.3) எனவும், முன்னியவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே என்னப்பொழியாய் மழையே லோரெம்பாவாய்' (திருவெம் பாவை 16) எனவும் வரும் திருமுறைத்தொடர்கள் நன்கு விரித்துரைத்தல் காணலாம். கடவுளது அருளின் நீர்மையதாய்ப் பயிர்முதலிய பல்லுயிர்களையும் உடம்பொடு கூடி வாழ்தற்கு நிலைக்களமாகத் திகழும் ஐம்பெரும் பூதமுதலிய தத்துவங்களின் திரட்சியாகிய உலகின் உண்மையினையும் உடன் உணர்த்துவதாக அமைந் துள்ளமை இங்கு மனங்கொள்ளத் தகுவதாகும்.

இறைவனது திருவருள் நீர்மையையுணர்ந்து அவனது திருவருளின் துண்ைகொண்டு ஐம்புலன்களையும் வென்று விருப்புவெறுப்பின்றி வாழும் அறவோர் ‘நீத்தார்’ எனப் போற்றப்பெறுவர். யான் எனது என்னும் இருவகைப் பற்றினையும் நீத்த பெரியோர்களாகிய அவர்தம் பெருமையினை விரித்துரைப்பது திருக்குறளில் உள்ள 'நீத்தார் பெருமை’ என்னும் மூன்றாம் அதிகாரமாகும். பொறிவாயில் ஐந்தவித்தா னாகிய இறைவன் அருளிய மெம்மையான ஒழுக்கநெறியில் வழுவாதொழுகி யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் அறுத்தவர்க ளாகிய நீத்தாரது பெருமையினையே விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் விழுமியது என எல்லாச் சமயநூல்களும் பாராட்டும் என்பார்,

“ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவற்றுணிவு” (திருக். நீத்தார். 1)

என்றார் திருவள்ளுவர். இங்கு ஒழுக்கம் என்றது, பொறி வாயில் ஐந்தவித்தான் அருளிய ஒழுக்கநெறியினை. அந்