பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


'பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலும்

துறந்தோர் துறப்போர் தொகை” (திருவருட் 11)

எனவரும் திருவருட்பயனாகும். இக்குறளின் ஈற்றிலுள்ள தொகை என்பதனைப் பிறந்த நாள் பிறக்கும் நாள், துறந்தோர், துறப்போர் தொகை மேலும் பிறக்கும் நாள் தொகை போலும் எனவும், நிரனிறைப்பொருள் கொள்க. பிறந்தநாள் - உலகம் தோன்றியது முதல் இதுவரை உயிர்கள் பல்வகைப் பிறவிகளுட்பட்டுத் தோன்றிய நாள்கள். மேலும் பிறக்கும் நாள் இனிமேலும் உயிர்கள் பிறவியுட்பட்டுப் பிறத்தற்கு உளவாகும் நாள் துறந்தோர் - பிறவிப் பிணிப்பினின்றும் விடுபட்டு இருவகைப்பற்றினையும் நீத்து இறைவனடியைத் தலைப்பட்டு இன்புறும் உயிர்கள், துறப்போர் இனிமேலும் இறைவனருளால் பிறவிப் பிணிப்பிலிருந்தும் விடுபட்டு உய்திபெறுதற்கு உரியராக இப்பொழுது பாசப்பிணிப்புடன் கூடிப்பிறந்து துறவினை மேற்கொள்ளும் நிலையினரான உயிர்கள், “ஆன்மாக்கள் முன்பு பிறந்த நாளுக்கும் இனிமேல் பிறக்கப்போகிற நாளுக்கும் தொகை கூறமுடியாதவாறு போல இதுவரை தேகப் பிரபஞ்சத்தைத் துறந்து வீடுபெற்ற உயிர்களுக்கும் இனிமேல் துறந்து வீடடையப்போகிற உயிர்களுக்கும் தொகை அளவிட்டுக் கூறமுடியாது” என்பது இதன் பொருளாகும். படைப்புக்காலந்தொட்டுப் பலவகைப் பிறப்புக்களிற் பிறந்து வடுப்பெற்ற உயிர்களையும் இனிமேலும் பிறந்து இருவகைப் பற்றுக்களையுந் துறந்து வீடு பெறுதற்கு உரியனவாய்ப் பாசப்பிணிப்புடன் கூடியுள்ள ஏனைய உயிர்களையும் இத்துணையர் என அறிந்து கணக்கிட்டுக் கூறவதென்பது, உலகந்தோன்றியது முதல் இதுவரை எத்தனை நாட்கள் கழிந்தன, இனிமேல் வரக்கூடிய நாட்கள் எத்தனை என எண்ணித் தொகை கூறவொண்ணாதது போல இயலாத செயலாம் என்றவாறு. எனவே இதுவரை பாசப்பிணிப்பொழிந்து வீடுபெற்ற உயிர்களும் வீடுபெறாத நிலையிற் பாசப்பிணிப்புடன் கூடியுள்ள உயிர்களும் அளவற்றனவாம் என அவற்றின் மிகுதி கூறினாராயிற்று. துறந்தார், வையத்து இறந்தார் எனத் திருவள்ளுவர் பகுத்துக்கூறிய இருவகைவுயிர்களையும் துறந்தோர்