பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

37


வேண்டும் என்னும் ஆர்வமுடையோர் மிகுதியாக அம்மைக்குத் தனிக் கோயில்கள் சிவபெருமான் திருக்கோயிலின் அகத்தும் புறத்தும் அமைக்கப்பெற்றன. காடுறையுலகமாகிய முல்லை நிலத்தின் தெய்வமாக நீலமேனி நெடியோன் வழிபடப்பெற்றது போலவே காடுகிழாளாகிய கொற்றவையும் நீலநிறம் வாய்ந்த திருமேனியுடையவளாகவும் ஆழியும் சங்கும் ஏந்திய கையினளாகவும் திருவுருவமைக்கப் பெற்று மாயோன் தங்கையாக வழிபடப்பெற்றாள். போரில் வெற்றி நல்குங் கொற்றவையாகிய அன்னையை அமைதி யளிக்கும் நிலையில் சிவனது இடப்பாகத்தில் அமர்ந்தருளிய உமையம்மையாகவும் இயைத்துப் போற்றும் உறவுமுறை சங்க காலத்திற்கு முன்னிருந்தே வழங்கியிருத்தல் வேண்டும் எனக் கருத வேண்டியுள்ளது. சிவபெருமான் தனது சத்தியாகிய உமையம்மையினை ஒருருவிற்கொண்டு அர்த்தநாரீசுவரத் திருமேனியினராக மாதொருபாகராக அருள்புரிதல் போலவே உமையின் தமையன் எனப் போற்றப் பெறுந் திருமாலைத் தனது ஒரு பாகத்தடக்கிய நிலையில் சங்கரநாராயணன் எனச் சிவபெருமான் போற்றப்

பெறுகிறார்.

சிவனும் திருமாலும் ஒருருவினராகப் (சங்கர நாராயனராகப்) போற்றப் பெறும் இவ்வழிபாடு, சைவத் திருமுறைகளிலும் நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்திலும் இடம் பெற்றுள்ளது.

'வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து

உருவுட னியைந்த தோற்றம் போல அந்தி வாணமொடு கடலணி கொளாஅ வந்த மாலை”

என வருந்தொடர் அந்திவானமும் கருங்கடலும் இயைந்த தோற்றத்திற்கு மாலொருபாகர் (சங்கர நாராயனர்) திருமேனியை மதுரைக் கண்னத்தனார் உவமை கூறியுள்ளார். எனவே மாதொருபாகர் திருமேனி கடைச்சங்ககாலந் தொட்டுத் தமிழகத்தில் வழிபடப் பெற்று

37. அகநானூறு, 350.