பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


வுள்ள இவற்றைத் தன் மாத்திரை என வழங்குவர் தத்துவ நூலார். நுண் பூதங்களாகிய இவ்வைந்தினையும் கூர்ந்து ஆராயவல்ல மெய்யறிவினர்க்கு இவற்றிற்குக் காரணமாய் இவற்றினும் நுண்ணியவாகிய தத்துவங்கள் பலவுள்ளன என்பது இனிது புலனாகும். உலகின் நுண் கூறுகளாகிய தத்துவ வகையினைப் பகுத்துனரவல்ல துண்ணுணர்வு என்பது இனிது புலனாகும். உலகின் நுண்கூறுகளாகிய தத்துவ வகையினைப் பகுத்துனரவல்லது நுண்ணுனர் வுடையோர் பொறிவாயில் ஐந்தவித்தானாகிய இறைவன் அறிவுறுத்திய ஒழுக்க நெறியில் வழுவா தொழுகுபவராய் ஐம்புலவுணர்வுகளையும் புறத்தே செல்லவொட்டது தம் அறிவின் திறத்தால் அடக்கி யாளவல்ல செம்புலச்செல்வர் களாய் யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் அறவே நீக்கிய அருளாளர்களே என்பதனை அறிவுறுத்துவது,

“சுவை யொளியூறோசைநாற்றமென்றைந்தின்

வகைதெரிவான் கட்டே யுலகு”

எனவரும் திருக்குறளாகும். சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமும் என்று சொல்லப்படும் தன் மாத்திரைகள் ஐந்தின் கூறுபாட்டினையறிதலாவது ஒசை ஊறு ஒளி சுவை நாற்றம் என்னும் இவை ஐந்தும் முறையே விசும்பு, வளி, தீ, நீர், நிலம் என்னும் ஐம்பெரும் பூதங்கட்கும் முதற் காரணமாயின எனவும், நுண்பதங்களாகிய தன் மாத்திரை களிலிருந்தே மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் அறிவுப்பொறிகள் (ஞானேந்திரியம்) ஐந்தும் வாக்கு, கால், கை, எருவாய், கருவாய் என்னும் தொழிற்கருவிகள் (கன்மேந்திரியம்) ஐந்தும் தோன்றுவன எனவும் இவற்றைப் பகுத்துணரும் உணர்வுடையாரை வகைதெரிவான்’ என்று உடன்பட்டுரைத்தமையால் ஆன்மா எனப்படும் அறிவுடைய பொருள் உண்டெனவும், பகுத்துணர்தற்கருவிகளாகிய புத்தி அகங்காரம் மனம் ஆகிய அகக்கருவிகளும் அவற்றிற்கு மூலமாகிய மூலப்பகுதியும் உண்டு எனவும் ஆராய்ந்து அறிதலாகும்.

‘வகைதெரிவான் கட்டேயுலகு எனத் திருவள்ளுவர் கூறுதலால் ஐம்பெரும் பூதங்கள் தன் மாத்திரைகள் முதலிய