பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


திருவள்ளுவர் உலகு, உயிர், கடவுள் என்னும் முப்பொருளுண்மையுடன் பட்டநிலையிலேயே வாழ்வியல் நூலாகிய இத்திருக்குறளை இயற்றியுள்ளார். இச்செய்தி, உலகு மன்னுயிர், இறைவன் ஆகிய முப்பொருள்களையும் உள்பொருளாகக் கொண்டு தாம் கூற எடுத்துக்கொண்ட அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப்பொருள்களைத் திருவள்ளுவர் தம் நூலில் வற்புறுத்தலால் நன்கு தெளியப் படும். நல்லறிவுடைய சான்றோர் பலராலும் தம் வாழ்க்கை நுகர்ச்சிகளின் பயனாக உள்பொருள்களெனத் தெளிந் துரைக்கப்படும் கடவுளுண்மை, உயிருண்மை, இருவினைப் பயனுண்மை, மறுபிறப்புண்மை முதலிய உண்மைகளைத் தத்தம் சிற்றறிவுக்குப் புலனாகாமை காரணமாக இல்லை யென மறுத்துரைப்போர் திருவள்ளுவர் காலத்திலும் இருந்தாரெனத் தெரிகிறது. சிறுபான்மையினராகிய அன்னோர் மக்களினத்தினராய் வாழ்ந்தாலும் உலகத்து வாழும் பெரும்பாலோர் தம் வாழ்க்கை நுகர்ச்சியின் பயனாக உண்டெனத் தெளிந்த உண்மைகளைத் தம் சிற்றறிவுக்குப் புலனாகாமை யொன்றே கொண்டு இல்லையென மறுத்துரைக்கும் முகமாக உலகமாந்தர் பலரொடும் முரண் பட்டுத் திரிதலின் அன்னோர் மக்கள் வடிவிற்கானப்படினும் உலகிற்பலரும் கண்டு அஞ்சத்தக்க பேய் வடிவினராகவே கருதப்படுவர் என்பதும் அவர்கள் வற்புறுத்தும் இன்மைக் கொள்கையினை உலகமக்கள் பலரோடும் ஒத்துவாழும் நல்லுணர்வுடைய பெருமக்கள் ஒரு பொருளாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதும் தெய்வப்புலவர் கருத்தாகும். இக்கருத்து,

&Q. - - - - - - o

உலகத்தா ருண்டென்பதில்லென்பான் வையத்(து) அலகையா வைக்கப்படும்” (திருக். 850)

எனவரும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளமை காணலாம்.

உலக மக்களுக்கு ஆக்கந்தரும் உறுதிப்பொருள் களுள் முதலாவதாக அறத்தினைக் கூறவே அறவுணர்வுக்கு நிலைக்களமாய அறவாழியந்தன னாகிய இறைவனது உண்மையும் அடுத்து உயிர்களது நுகர்ச்சிக்குக் காரணமாகிய பொருள்கூறவே அந் நுகர்ப்பொருள்களின் திரட்சியாகிய