பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

459


உடம்பின் கண்னும் ஏனைய உலகப்பொருளின் கண்ணும் வைத்த அவாவை அறவே துறத்தல் வேண்டுமென்பதும், புறமாகிய செல்வத்தின் கண்ணும் அகமாகிய உடம்பின் கண்ணும் உளதாம்பற்றின்ன அவற்றது நிலையின்மை நோக்கி அறவே விட்டொழித்தலே துறவுநிலையாம் என்பதும் ஆசிரியர் திருவள்ளுவர் அறிவுறுத்தும் தத்துவவுண்மை களாகும்.

“மற்றுந்தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க

லுற்றார்க் குடம்பும் மிகை” (திருக். 345)

என்பது திருவள்ளுவர் வாய்மொழி. இதனால் பிறவா நிலையாகிய வீட்டினையடைதலே அறிவுடைய நன்மக்களின் நோக்கமாதல் வேண்டும் என்பதும் வீடுபேற்றுக்குச் சாதனமாவது இருவகைப் பற்றுக்களையும் அறவே விட்டு நீங்குதலாகிய துறவறமே என்பதும் நன்கு புலனாகும். "உடம்பு என்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது, பத்துவகை இந்தியவுணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடியமனம். இது நுண்ணுடம்பு எனவும் படும். இத்துன்பங்களால் உயிரோடு ஒற்றுமைப்படுதலின் இவ்வுடம்புகளும் யான் எனப்படும்” என்பார் பரிமேலழகர்.

அகம் புறம் என்னும் இருவகைப்பற்றினையும் இறுகப் பற்றிக் கொண்டு அப்பற்றினை விடாதவர்களைப் பிறவித் துன்பங்கள் இறுக்கப்பற்றிக் கொண்டு நீங்காமல் வருத்துவன. இப்பற்றுக்களை அறவே விட்டொழித்தவர்களே வீடு பேற்றினைத் தலைப்பட்டவர்கள். அங்ங்னம் துறவாதவர்கள் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டு வருந்துவர் என்பார்.

“தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர்” (திருக். 348)

என்றார் திருவள்ளுவர். முற்றத்துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார். அங்ங்னம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டோராவார் iன்பது இதன் பொருள். தீரத் (முற்றுத் துறத்தலாவது பொருள்களையும் (உரு.அரு