பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

465


ஒரு பொருளின்கட் கற்பனையாகலின் அவ்வாறு (உலகத்தார் கற்பித்துக் கொண்ட கற்பனையினை மெய்ம்மையென) உணராது நில முதல் உயிரீறாகிய தத்துவங்களின் தொகுதியெனவுணர்ந்து அவற்றை நில முதலான காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டு சென்றாற் காரண காரியங்கள் இரண்டுமின்றி முடிவாய் நிற்பதனை யுனர்தலாம். எப்பொருள் என்ற பொதுமையான் இயங்கு தினையும் நிலைத்திணையுமாகிய பொருள்களெல்லாம் இவ்வாறே யுணர்ப்படும். இதனால் மெய்யுணர்வினது இலக்கணம் கூறப்பட்டது” எனப் பரிமேலழகர் தரும் விளக்கம் சாங்கிய நூலார் கொள்கையினை அடியொற்றி யமைந்ததாகும். மெய்யுணர்தல் என்ற தொடர், மெய்மையான் (ஒரு பொருளை ஆராய்ந்து) உணர்தல் என்ற பொருளுடைய அதிகாரத் தலைப்பாகும். சொல்லின் முடியும் இலக்கணத்ததாகிய மெய்யுணர்தல் என்ற தொடர் மெய்ம்மையான் ஒன்றனை ஆராய்ந்துணர்தல் என்ற பொதுப்பொருளோடு மெய்ப்பொருளாகிய இறைவனை இடைவிடாது சிந்தித்துணர்தல் என்ற சிறப்புப் பொருளையும் தருவதாகும். அத்தகைய சிறப்புப்பொருளை விரித்துரைக்கும் நிலையிலமைந்தனவே இவ்வதிகாரத்தில் நான்கு முதல் ஒன்பது முடியவுள்ள குறள்கள். ஐந்தாங் குறளாகிய இதன்கண் புறத்தே காணப்படும் பொருள்களையெல்லாம் எப்பொருள் என்ற வினாவில் அடக்கியும் அங்ங்னம் அடக்கியவற்றை அப்பொருள் எனச் சுட்டி அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என அவற்றை உள்நின்றியக்கும் செம்பொருளைக் கண்டு தெளிதலே மெய்யுணர்வின் சிறப்பியல்பாகும் என்று ஆசிரியர் வலியுறுத்தினார் எனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும்.

இம்மக்கட்பிறப்பின் கண்னே அருளனுபவமுடைய ஆசிரியனிடத்தே உபதேசமொழிகளைக் கேட்டு அதனால் மெய்ப்பொருளையுனர்ந்தவர் மீண்டும் இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர் என்பது,

“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி” (திருக். 356)

சை. சி. சா வ. 30