பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


எனவரும் திருக்குறளால் உணர்த்தப்பட்டது.

கற்றலாவது பலரிடத்தும் பலகாலும் நற்பொருளைக் கேட்டுப் பயிலுதல். மெய்ப்பொருள் காணுதலாவது, என்றும் மாறாத மெய்ப்பொருளாகிய முழுமுதற் பொருளை உள்ளத்திற் சிந்தித்துப் போற்றுதல். ஈண்டு வாரா நெறி - இவ்வுலகத்து மீண்டும் வந்து பிறவாமைக்கு ஏதுவாகிய வீட்டு நெறி. மீண்டு வாரா வழியருள் புரிபவன்’ (திருவாசகம்) எனவும் வாராவுலகருளவல்லான்’ (திருத்தாண்டகம்) எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இத்திருக்குறள் தொடருடன் வைத்து ஒப்பு நோக்கத்தக்கன. மெய்ப் பொருளை யுணர்தற்கரிய கேட்டல் சிந்தித்தல் தெளிதல் என்னும் உபாயம் மூன்றனுள் கேட்டல் இதனாற் கூறப்பட்டது

ஆசிரியன்பாற் கேட்ட உபதேச மொழிகளை உள்ளமானது அளவைகளாலும் பொருந்து மாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனால் என்றும் உள்ளதாகிய முழுமுதற்பொருளையுனருமானால் அங்ங்ணம் உணர்ந்த உயிர்க்கு மீண்டும் பிறப்புளதாக நினைக்கவேண்டா என்பார்,

“ஒர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாய்ப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” (திருக். 357)

என்றார் திருவள்ளுவர். இதன் கண் உள்ளம் என்றது ஆன்மாவை. உள்ளது என்றது என்றும் மாற்ாது உள்ளதாகிய சத்தாகிய முழுமுதற் பொருளை. உள்ளம் ஒருதலையாய் ஒர்த்து உணரின் பேர்த்துப்பிறப்பு (உளதாக) உள்ள வேண்டா என இசையும். ஆன்மாவை உள்ளம் என்றும் முழுமுதற் பொருளை உள்ளது (சத்து) என்றும் வழங்கும் சைவசித்தாந்தச் சொற்பொருள் மரபு இத்திருக்குறளில் இடம்பெற்றுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும். இத்திருக்குறளின்படி உள்ளது எனப்படும் முழுமுதற் பொருளைத் தெளியவுணர்ந்து வழி படாதவர்கள் சமணர்கள் என்ற செய்தியை ஒர்த்துள்ளவாறு நோக்கி யுண்மையையுனராக் குண்டர் வார்த்தையை மெய் யென்றெண்ணி மயக்கில் வீழ்ந்தழுந்து வேனை' எனவரும்