பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


பரிமேலழகர் தரும் விளக்கும் சைவசித்தாந்தக் கோட் பாட்டிற்கு ஒத்ததேயாகும். பரிமேலழகர் இங்குக் கேவலப் பொருள் என்றது முதற்பொருளாகிய செம்பொருளாகிய சிவமென லாமே (திருமந்திரம்) என வரும் திருமூலர் வாய்மொழியாலும் 'செம்பொருட்டுனிைவே (திருவாசகம்) எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழியாலும் நன்கு தெளியப்படும்.

ஒருவர் எல்லாப் பொருட்குஞ் சார்பாகிய செம் பொருளையுணர்ந்து தம்மைச் சார்வனவாகிய இருவகைப் பற்றும் அறஒழுகவல்லராயின் அவரை முன்னர்ச் சாரக் கடவனவாய் நின்ற துன்பங்கள் அவர்தம் உணர்வொழுக்கங் களையழித்துச் சாரமாட்டா என்பார்,

"சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மாற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய்” (திருக். 359)

என்றார் தெய்வப்புலவர். இத்திருக்குறளில் முதற்கண் உள்ள சார்பு என்பது உலகுயிர்களாகிய எல்லாப் பொருட்கும் சாரும் நிலைக்களமாகத் திகழும் செம்பொருளையும் அடுத்து நின்ற சார்பு என்பது உயிர்களைச் சார்வனவாகிய இருவகைப் பற்றுக்களையும் உணர்த்தின. ஆகுபெயர் சைவனாரவர் சார்பலால் யாம் சார்பிலோம் நாங்களே என்பது ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயல். இத்திருக்குறளில் சார்புணர்தல் என்றது எல்லாப் பொருட்குஞ் சார்பாய் நின்ற முழுமுதற் பொருளை இடைவிடாது உணருந் தியானத்தை யும் சார்புகெடவொழுகல் என்றது சமாதியையுங் குறிப்பன. இத்திருக்குறட்பொருளை விரித்துரைக்கும் நிலையில் அமைந்தது,

"சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் என்றமையான்

சார்புணர்தல் தானே தியானமுமாம் - சார்பு கெடவொழுகின் நல்ல சமாதியுமாம் கேதப் படவரு தில்லைவினைப் பற்று”

எனவரும் திருக்களிற்றுப்படியார் வெண்பாவாகும்.

“சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன : பிறப்பு